தமிழ் தோட்டம் இலவச படைபாளர்கள் யாவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
லஷ்மியின் படைப்பு
இசைதல்
சுட்டெரிக்கும் சுடர் விழிப்பார்வை
தன்னைத் தானே உரசிக்கொள்ளும் இதழ்கள்
இனிமையான வார்தைகள்
இடறி விழாத மனம்
உண்மையில் நீ தான் பெண்ணோ
உறங்கிக் கிடந்த என்னை
உசுப்பேற்றி வைத்தது ஏன்
இப்பொழுதெல்லாம் சூரியனை
பார்ப்பதை மறந்து விட்டேன்
தினமும் உன்னைப் பார்பதால்
எனக்கு நானே ஊமை ஆனேன்
உன் இனிமையான வார்தையை கேட்பதால்
இத்தனை முறை ரசித்த உன்னை நீ
ஏன் ஒரு முறைக்கு கூட ரசிக்க வில்லை
இடறி விழாத உன் மனதை சற்று இசைந்திடச் சொல்
காத்திருக்கிறேன் உன் இசைதலுக்காக