`நீங்களும் உங்களது கவிதைகளை எழுதி அனுப்பலாம். அவைகள் இப்பகுதியில் இலவசமாக வெளியிடப்படும்.
கவிதைகளை Tamil Forum மூலம் அனுப்புவதற்க்கு இங்கு சுட்டவும்
அல்லது
கீழ் காணும் மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்
தொடர்புக்கு....
tamilparks @ gmail . com
காலம் மாறிப்போச்சு: (ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்)
அம்மிகள் காணாது போனதோடு
அம்மாக்களும் காணாது போனார்கள்!
மம்மியாய் வாழ்கின்றவர்கள்
வாடகைக்கும் தாயாக கிடைக்கின்றனர் !
கணினி என்பது மனிதவாழ்வில்
கணிசமான அங்கமாகிவிட்டது!
கணினியை கற்போர்
காமத்தையும் பயிலுகின்றனர்!
மென்பொருள் நிருவனங்களில்
படுக்கையறைகளும்
பதுங்கியிருக்கின்றனவாம்!
திரைப்படங்களெல்லாம்
திரை யில்லாபடங்களாகவே
காட்சியளிக்கின்றன!
தமிழ்பாடல்களில்
ஆங்கிலமே அதிகமாயிற்று!
அங்கங்களை மறைத்த ஆடைகள்
அங்கங்கு மறைப்பதால்
ஆபாசமாகவே இருக்கின்றன!
குட்டிகளுக்கெல்லாம்
புட்டிகளே பாலூட்டுகின்றன!
பாலூட்ட படைத்தவையே
படு கவற்சியாக்கப்படுகின்றன!
ஆ_வின் பாலெல்லாம்
ஆவி இல்லாபாலாக அங்கங்கே
பெட்டிகளிலும் பைகளிலும்
கிடைக்கின்றன!
வியாபாரத்திற்கு, விளம்பரம்
என்பது போய் விளம்பரமே
வியாபாரமாக்கப்படுகின்றன!
அசல் என்ற உண்மை போய்
பொய் போலிகளே புரள்கின்றன!
பொன் நகை என்பது
பெண் நகையாகிவிட்டது !
குங்குமத்தில் வைத்த பொட்டு
நிறம் மாறியதோடு வடிவமும் மாறி
ஒட்டவசதியாய் பசையாக்கப்பட்டுள்ளது!
பெண்கள் ஆண்களின் உடையிலேயே
அலாதியாய் உள்ளனர்!
உடன் உறவுக்குள் உடனிருந்து
மகிழவேண்டியவர்கள்
உடல் உறவுக்குள்ளே
உல்லாசமயிருக்கின்றனர்!
துச்சாதனர்களே காவலுக்கு
களமிறக்கப்படுகின்றனர்!
லட்சியம் என்பது லஞ்சமாகவும்
லச்சமாகவும் மாறிவிட்டன!
பிறக்கும் குழந்தை கூட
கைவிரலுக்குள் கைபேசியை
மறைத்துவைத்துள்ளன!
பள்ளிகளிலும்
பள்ளியறை உள்ளதாம்!
இயந்திரதில் கூட
இதயம் இயங்குகின்றனவாம்
மனிதனே மனிதனை கொல்லும்
மனிதாபிமானம் மலிந்துவிட்டது!
உலகம் நாடகமேடையாம் ,மக்கள்
நடிப்பதையே வாழ்க்கையாக்கிட்டார்கள்
காலங்கள் மாறலாம், நாகரீக
கோலங்கள்மாறலாமா?
இந்தக்கால மாற்றங்களுக்கு
வரும் காலங்களே!
பதில்சொல்லட்டும்
நன்றி - ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்