|
"புதிய பிரார்த்தனை"
நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை. |
|
*******************************************************************************************
உயர்ந்த லட்சியங்கள் வேண்டும்
உறுதியான உள்ளம் வேண்டும்!
தன்னம்பிக்கை வலிவுற வேண்டும்
உள்ளம் நிறைவு பெறவேண்டும் !
உண்மையாய் உழைத்திட வேண்டும்
உரிய மதிப்பு வேண்டும்!
மகிழ்ச்சி நிறைந்திட வேண்டும்
சாதனைகள் நிகழ்த்திட வேண்டும்!
வெற்றிகள் நிலை பெற வேண்டும்
நினைத்ததை ஜெயித்திட வேண்டும்!
நீண்ட ஆயுளும் வேண்டும்
நிஜமாய் வாழ்ந்திட வேண்டும்!
*******************************************************************************************
நன்றி நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.
-------------------------------------------------------------------------------- |
Back |
|