உன்னால்.... நான்
முகவரி இல்லாத எனக்கு முகவரி கொடுத்தவள் நீ
என் முகம் பார்க்க முன்னிற்பவள் நீ
கண்ணை கவர வண்ண புடவை அணிந்தவள் நீ
காது கேட்க கானம் பாடியவள் நீ
என் இதயத்தின் உள்ளே மெல்ல நுழைந்தவள் நீ
காதலின் உணர்வுகளை என்னுள் உணர்தியவள் நீ
முதலில் நீ யார் என்று தெரியவில்லை - இப்போது
நீ இலாமல் நான் யாரென்று தெரியவில்லை
உன் கண்களை கண்டேன், கவிதை எழுதினேன்
உன் சலனம் கேட்டேன், சங்கீதம் இயற்றினேன்
உன் நிழலை தொட்டேன், என்னை மறந்தேன்
உன் கரம் பிடிதேன், எல்லாம் அடைந்தேன்.
*************************************************
நன்றி (கே. ஆர். ராஜன்)
-------------------------------------------------------------------------------- |