சற்றுமுன் நீ நேசிக்கும் மழையில்
நானும் நனைந்தேன்.
ஏனோ தெரியவில்லை
உன்னைப் பார்த்ததும் உதடுகளும் நாவும்
ஒட்டிக்கொள்வது போல
மழையைப் பார்த்ததும்
நிகழ்ந்து போனது.
மழை
அழுகின்றதா சிரிக்கின்றதா
என்று சுதாரிப்பதற்குள்,
கண்ணீர்த்துளி........
சம்பந்தமில்லாமல் வார்த்தைகள் கோர்த்து
கவிதை என்று நீ பசப்புவது போல,
விட்டு விட்டுத்தூறியது மழை,
மழை தீண்டிய இடங்களில்
மயிலிறகாய் வருடிக்கொண்டிருந்தாய்.
உனக்காகவே
மழைத்துளி சேமித்து
பூக்களுக்குள் அடைகாத்து
புதையலாக்குகிறேன்.
புரிந்துகொள்,
புல்வெளி மழையை நேசிப்பதைக்
காட்டிலும்
நான் உன்னை நேசிக்கிறேன்.
'எஸ்கிமோ' வெயிலை நேசிப்பது போல.
************************************************
நன்றி (சாரங்கன்)
-------------------------------------------------------------------------------- |