» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

Software Engineer Life
 

Shajin A. Xavier

அலுவலகத்திலிருந்து ஆறரை
மணிக்கே கிளம்பினேன்
இருந்தும் ஆச்சரியமில்லை,
அன்று ஞாயிற்றுக்கிழமை

பேருந்து நிறுத்தத்தில்
இரயிலுக்காக
காத்திருந்தேன்
ஐந்தாறு பேருந்துகள் ஒரே
நேரத்தில் தான்
வருமென்பதால்
அப்படி அழைப்பது தவறில்லை
என்றே தோன்றியது....

சில சமயம் பேருந்தும்
மழையும் ஒன்றுதானே
காத்திருக்கும் போது
வருவதில்லை..
வேகமாய் வந்தாலும்
நிற்பதில்லை...

உரசியபடி வந்து நின்றது
ஷேர் ஆட்டோ
மொத்த சாக்லேட்டையும்
வாயில் போட்ட குழந்தையைப்
போல வண்டி
புறப்பட்டது....

உயிர்நண்பர்களுடன் கூட
அவ்வளவு அருகே
பயணித்ததில்லை...
கடிவாளமிட்ட குதிரை கூட
காத்திருந்து சென்றது
சிக்னலில்
அவசரத்தில் ஆறாம் அறிவை
வீட்டிலேயே விட்டிட்டான்
போலும்...

ஒருவழியாய் சென்றடைந்தேன்
வீட்டை
சாப்பாடு இருக்கா என்றேன்
நண்பர்களிடம்...

சத்தம் மட்டும் கேட்டது
ஹாட்-பாக்ஸில் இருப்பதாய்..
பாக்ஸ் என்றே
சொல்லியிருக்கலாம் அவன்...
சுடாத(ஆறின)தோசையையும்,சுட்ட
தம்மையும் முடித்துவிட்டு
வந்தமர்ந்தேன்...
சிணுங்கியது செல்போன்
சிந்தனையில் அவளோ
என்றெண்ணி எடுத்தால்
நினைத்தது என்று
நடந்திருக்கிறது

display யில் PL Calling...

"Hi.. We have an urgent meeting tommorrow.
please be sharp at 9 AM... Thanks"

தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு
சத்தமில்லாமல் சன் நியூஸ்
பார்த்தேன்
அவர்கள் சொன்னார்கள்
அடுத்த 48 ம்ணி நேரத்திற்கு
கன மழையென்று...
இவர்கள் சொன்னது என்று
நடந்திருக்கிறது என்றது
மனது சிரித்தபடி.

இருந்தும் ஆசையுற்றேன் மழை
பொழிய
காலைத்தூக்கத்தை துறக்க
துறவி கூட தயங்க
நான் எழுந்தேன் கடமை
முடிக்க
காதுகளில் கேட்டது மழையின்
சத்தம் மட்டுமல்ல TV யும்
தான்.
பள்ளி,கல்லூரிக்கு
விடுமுறையாம்
நமக்கில்லையே,இது
முறையாம்!!!

நீச்சலடித்து வந்தேன்
பேருந்து நிறுத்தத்திற்கு
Fevicol விளம்பரம் போல் வந்து
நின்றது பேருந்து
வழி இல்லாமல் நானும் model
ஆனேன்.

"சனியன் ஒழுகுது" குரல்
கேட்டு திரும்பினேன்
மழைத்துளி என்ன உளியா?
உன்னை துளைப்பத்ற்க்கு
கேட்க நினைத்து கேட்காமல்
திரும்பிக்கொண்டேன்.

ஒன்றிரண்டு மாதத்தில் bike
வாங்கணும்
சிந்தனையைச் சிதறச்
செய்தது சிந்தனை சிதறி bike ல்
விழுந்து செத்தவன்
காட்சி!அவசரம் ஏன் மாதம்
5-6ஆகட்டுமே என்றது
மனசாட்சி!

என்று இறங்கியிருக்கிறோம்
நிறுத்தம் வந்தவுடன்
பல அடி முன்பே படியில்
நின்றேன்
வாய் வாசித்தது "படியில்
பயணம் நொடியில் மரணம்"

சாட்சியாய் படிக்கட்டில்
தவறிய தண்ணீர்துளிகள்
சக்கரத்தில் செத்துக்
கொண்டிர்ருந்தன.
உடனே இரண்டடி எகிறினேன்.

ஒரு வழியாய் office
வந்தடைந்தேன்.
5 நிமிடம் தான் இருந்தது மணி
9 ஆக
அப்பாடா! என்றமர்ந்தேன்
என் இருக்கையில்.
செல்போன் சிணுங்கியது.
display ல் PL calling...

"Sorry.. I was caught up in the train..
we will have meeting later..."

என்றது குரல் வீட்டில்
இருந்தபடி
என்னடா வாழ்க்கை இது
வெறுத்தபடி தலை
குனிந்தேன்.
side ல் graphics தெரிந்தார் அப்பா.

என் கடைசி பையன் software engineer ஆ
வேலை பார்க்கிறான்...
அடுத்து அம்மா
mobile நல்லா இருக்குப்பா ஆனா
options தான் ஒண்ணும் புரியலே...
வாழ்க்கையின் அர்த்தம்
புரிந்த ஆனந்தத்துடன்
தொடங்கினேன் வேலையை!
Hi.. GM...enna panikkittu irukkey? coffee? :)என்றபடி!


*************************************************
நன்றி Shajin A. Xavier


-------------------------------------------------------------------------------- 

 

 

 

Back

இலவச சுட்டிகள்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on Wednesday, 10/01/2007