கலியுகமாம் இவ்வையகத்தில்...
கண்கண்ட தெய்வமாய் அன்னை மரியாள்...
கடற்கரையருகில் வீற்றிருந்து...
கண்கவர் தோற்றத்திலே...
நாடிவரும் பக்தரெல்லம்..
நலம் பலவும் பெற்றிடவே...
பாடிவரும் பக்தர்களின்
பாவம்தனை போக்கிடவே...
பாலகனை கையிலேந்தி
பரவசமாய் நிற்கும் தாயே...
மாயையான இவ்வுலகில்
மகிழ வைக்கும் அன்னை மரியே...
மானுட்த்தின் விடிவெள்ளியாய்
திகழ்பவளும் நீயே...
நாள்தோறும் உன்னை போற்றி...
நற்கருணை செயலாற்றி...
தீய எண்ணம் தனை மாற்றி...
தீபத்தின் ஒளியேற்றி...
உலகம் உள்ளகாலம் வரை...
உன் நிழலாய் வழ்ந்திடவே...
வன்புகழ் அன்னை மரியே...
பாவக்கடலில் தத்தளிக்கும் எங்களை...
பாசத்துடன் அணைத்து கரை சேர்க்க..
வர வேண்டும் தாயே...
கலங்கரை விளக்காய் நீயே...
நன்றி S.Devarajan
-------------------------------------------------------------------------------- |