தலை வாசல்
நகைச்சுவை
கவிதை
கட்டுரைகள்
சிறுகதைகள்
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தமிழில் எழுத

இலவச விளம்பரம்

தெனாலிராமன் கதைகள்
நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

 Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

கூகிளின் கதை
 

ஸ்டான்போர்ட் பல்கலைகழக மாணவர்கள் இருவர் Larry Page-ம் Sergey Brin-னும் தங்கள் பிஎச்டி ஆய்வுக்காக விளையாட்டாக உருவாக்கிய தேடல் இயந்திரம் தான் Backrub.துவக்கத்தில் இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில் தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000 செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)

2004-ல் கூகிள் பங்குகள் வெளியான போது விளம்பரம் இல்லா இந்த வெற்று முகப்பு பக்கம் கொண்ட வலையகம் எப்படி பணம் உருவாக்க போகுது என எல்லாரும் வியந்தனர்.அந்த ஆண்டு முதற்பாதியில் மட்டும் $1.4 billion சம்பாதித்தது கூகிள்.இன்று இது $6.1 billion கம்பெனி.

இதன் Data center 450,000 servers கொண்டது.

பல வகையான செர்வர்கள் 533 MHz Intel Celeron முதல் dual 1.4 GHz Intel Pentium III வரை.

இருக்குமிடங்கள்:Mountain View, California;Virginia; Atlanta, Georgia; Dublin, Ireland; கடைசியாக மிகப்பெரியதாக புத்தம் புதிதாக 2006-ல் The Dalles, Oregon-ல் ஒன்று.

2005 -ல் மட்டும் 8 பில்லியன் பக்கங்களை கூகிள் அட்டவணைப்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.

கடைசியா ஒன்று கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!

கீழே படத்தில் கூகிளின் முதல் முதல் Production Server-ஐ பார்க்கலாம். இப்போது அது மியூசியத்தில்.

-------------------------------------------------------------------------------- 

 

 

[ கம்பியூட்டர் ] [ இலக்கியம் ] [ சமூகம் ] [ பொது ] [ மேலும் ]

Back

இலவச சுட்டிகள்

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on 26/02/2007