`தம்' அடிக்கிறது- அது தாங்க புகைப்பிடிக்கிறது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அப்படின்னு என்னதான் சொன்னாலும் சிலர் கேக்க மாட்டேங்கிறாங்க. ஆம்பிளைங்க, வயசுப்பசங்க சில விடலை பசங்க தான் `தம்' அடிக்கிறாங்கன்னு நீங்க நினைச்சா அது தப்புங்கோ.
இப்பல்லாம் சில பொம்பளை பசங்களும் `புண்பட்ட மனதை புகை போட்டு ஆத்தணும்' அப்படின்னு சொல்லிக்கிட்டு `தம்' அடிக்கிறாங்க. எல்லா பிள்ளைகளும் இந்த தப்பை செய்யறதில்ல. சிட்டில இருக்கிற பிள்ளைங்க, காலேஜ் ஆஸ்டல்ல இருக்கிற பொண்ணுங்க, `தம்' அடிக்கிற பையனோடு சுத்துற பொண்ணுங்க... இவங்க எல்லாம்
சிகரட்டு வாசனை பிடிச்சுப்போய் `தம்' அடிக்கிறாங்க அப்படின்னு ஒரு ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கு.
இப்படி `தம்' அடிக்கிற பொண்ணுங்களுக்கு ஒரு எச்சரிக்கை. அதாவது `தம்' அடிக்கிற பொண்ணுங்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைகளுக்கு காது கேக்காம போகும் ஆபத்து அதிகம் இருக்கு.
அமெரிக்காவில இருக்கிற கலிபோர்னியா பல்கலைக்கழகம் இந்த அதிர்ச்சி தகவலை சொல்லி இருக்கு. இந்த ஆராய்ச்சிக்காக இவங்க எலியை வச்சு சோதனை செஞ்சாங்க. நிகோடின் (சிகரட்டில் இருக்கிற கெட்ட சமாச்சாரம் தான் நிகோடின்) புகையை சுவாசிக்கும்படி சில எலிகளை வளத்தாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அந்த எலிகளில்
பெண் எலி கர்ப்பம் ஆகி குட்டி போட்டுச்சு. அந்த குட்டிகளை சோதனை செஞ்சப்போ அதுகளுக்கு காது கேட்பது மந்தமாக இருப்பது தெரிஞ்சது. அதோடு அந்த எலிகளின் புத்திசாலித்தனமும் ரொம்ப குறைவா இருந்துச்சு.
இதுல இருந்து என்ன தெரிஞ்சதுன்னா... `தம் அடிக்கிற பெண்களுக்கு பிறக்கிற குழந்தைகளின் காது கேட்கும் தன்மை மற்றும் புரிந்து கொள்ளும் தன்மை ரொம்ப குறைச்சலா இருக்கும்'.
பொம்பளைங்க `தம்' அடிச்சா இப்படி பாதிப்பு வரும் சரி ஆம்பளைங்க `தம்' அடிச்சா என்ன பாதிப்புன்னு கேக்கலாம். `தம்' அடிக்கிற ஆம்பளைங்களோட விந்தணு வீரியம் குறைஞ்சு போயிடும். அவங்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் படிப்பில மோசமா இருப்பாங்க.
அதனால நல்ல ஆரோக்கியமான, புத்திசாலித்தனமான குழந்தை பிறக்கணும்னா ஆம்பளைங்களும் சரி பொம்பளைங்களும் சரி `தம்' அடிக்க கூடாது.
-------------------------------------------------------------------------------- |