» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

கம்பியூட்டரின் விரைவான பணிக்கு ரேம்
 

கம்பியூட்டரின் நினைவகம் என்று அழைக்கப்படுவது ரேம் (Ram) நினைவகத்தைத்தான் குறிக்கிறது. சாதாரண அலுவலக பயன்களுக்கு கம்பியூட்டரை பயன்படுத்தும் போது ரேம் நினைவகத்தின் அளவை கருத்தில் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட ரேமின் அளவை ஆர்வமுடன் மல்ட்டி மீடியா வந்த பிறகு கவனிக்கவும் பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர்.

ஒரு பணியை விரைவாக முடிக்கக் கூடிய கட்டளையை பிராசசருக்கு கொடுப்பதற்கான தற்காலிக நினைவகமாக செயல்படுவது ரேம் ஆகும். இதனால் கட்டளைகள் மற்றும் தகவல்களை பிராசசர் தேடி அலைய வேண்டியது இல்லாமல் விரைவாக பணிகளை செய்து முடிக்கிறது. கம்பியூட்டரில் தகவல்களை மென்பொருள்களை முழுமையாக பதிவு செய்து எந்த நேரத்திலும் பாதுகாத்துக் கொண்டு இருப்பது ஹார்டு டிரைவ்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட செயல் நடக்கும் போது அதன் இயக்கத்திற்கு தேவையான கட்டளைகளை, தகவல்களை பதிவு செய்ய பயன்படுவதே ரேம் நினைவகம். விண்டோஸ் இயக்கச் சூழலில் நிறுவப்பட்ட பர்சனல் கம்பியூட்டர்களுக்கு 64 எம்.பி. ரேம் நினைவகம் போது மானதாக உள்ளது. ஆனாலும் விண்டோஸ் எக்ஸ்ப்பி இயக்கச் சூழலுக்கு 128 எம்.பி. நினைவகம் இருந்தால் நல்லது. அப்போது தான் கம்ப்ïட்டரின் செயல்பாடு விரைவாக இருக்கும்.

முன்பு இருந்த எம்.பி. நினைவகத்தினை வைத்துக் கொண்டு கம்பியூட்டரை வேகமாக இயக்க முடியாது. இப்போது எவ்வளவு ரேம் இருந்தாலும் கிராபிக்ஸ், அனிமேஷன் போன்ற பயன்பாடுகளுக்கு போதுமானதாக இல்லை. கம்பியூட்டரின் செயல்பாடுக்கு போதுமான ரேம் நினைவகம் கிடைத்தால் ஹார்டுடிரைவிலேயே தனியாக நினைவகத்துக்காக ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது.

இந்த விரீச்சுவல் மெமரிபைல், ரேம் பற்றாக்குறையைத் தவிர்க்க இயக்க நேர தகவல்களை பதிவு செய்து வைக்க பயன்படும் என்றாலும் விரீச்சுவல் மெமரி பைலில் இருந்து தகவல்களை இயக்க நேரத்தில் பெறும் போது வேகம் குறைவாக இருக்கிறது. ஹார்டு டிரைவின் ஒரு பகுதியானது ரேம் நினைவகமாக பயன்படுத்துவது, தகவல்களை அங்கிருந்து பெற முடிவது ஸ்வாப்பிங் என்று அழைக்கப்படுகிறது. ரேம் நினைவகத்தில் தகவல் எந்த இடத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் ஒரே சீரான நேரத்தில் தகவலை தேவைப்படும் போது பெற முடியும்.

இதற்கு மாறுதலாக சீரியல் அக்சஸ் மெமோரிவகை செல்களின் வரிசைப்படி தகவல்கள் பெறப்படும். இதனால் நினைவகத்தில் உள்ள விவரங்கள் விரைவாகவும், இறுதி பகுதியில் இருக்கும் தகவல்கள் தாமதமாகவே கிடைக்கும். சுமாராக 100 எம்.பி.ரேம் தேவைப்படுகிறது. எனில் நமது கம்ப்ïட்டரில் 64 எம்.பி. ரேம் நிறுவப்பட்டு உள்ளது. இதற்கு கூடுதலாக 64 எம்.பி. ரேம் மாடுïலை வாங்க வேண்டி இருக் கும்.

கம்பியூட்டரில் உள்ள நினைவகம் தேவையான அளவு இல்லை. இதை அதிகரிக்க வேண்டும். அப்படியானால் கம்பியூட்டர் இயக்கத்தில் இருந்தால் முதலில் நிறுத்த வேண்டும். பின்னர் மின் இணைப்புக்கான கேபிளை பிளக்கில் இருந்து எடுத்து விட வேண்டும். கம்பியூட்டரின் உள்பாகங்களை தொடுவதற்கு நமது உடலில் இயல்பாக சேமிக்கப்படும் சிறிதளவு மின் ஆற்றலை விடுவிக்க வேண்டும்.

இதற்காக கைப்பட்டைகள் விற்கப்படுகின்றன. கம்பியூட்டரின் கேபினெட்டை திறந்து நினைவக மோடுல்கள் அமைந்திருக்கும். மெமரி ஸ்லாட்டுகள் உள்ளனவா என பார்க்க வேண்டும். பின்னர் புதிய நினைவக மோடுல்களை எடுத்துக் கொண்டு சிம் டிம் வகையான கார்டா என பார்த்து அதற்குரிய ஸ்லாட்டில் சாய்ந்தது போன்று வைக்க வேண்டும்.

கம்பியூட்டர் தானாகவே நினைவகத்தை புரிந்து கொள்கிறதா? நினைவகத்தின் அளவு கூடியிருக்கிறதா? என சிஸ்டம் பிராப்பர்ட்டிஸ் தேர்வுகளில் சென்று பார்க்க வேண்டும். இதன் பின்னர் கம்பியூட்டர் இயக்கத்தை நிறுத்தி விட்டு மதர்போர்டு கேபினெட்டை சரிவர மூடி விட்டு கம்பியூட்டர் இயக்கத்தை தொடரலாம்.
 


-------------------------------------------------------------------------------- 

 

 

[ கம்பியூட்டர் ] [ இலக்கியம் ] [ சமூகம் ] [ பொது ] [ மேலும் ]

Back

இலவச சுட்டிகள்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on Wednesday, 03/01/2007