தலை வாசல்
நகைச்சுவை
கவிதை
கட்டுரைகள்
சிறுகதைகள்
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தமிழில் எழுத

இலவச விளம்பரம்

தெனாலிராமன் கதைகள்
நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

 Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

அரசாங்க வேலையா...... ஆகா ... பேஷ்,,,,,, பேஷ்,,,,,,
 

 

பையன் எம்.பி.ஏ. படித்திருக்கிறான். அவன் அப்பா ஒரு லட்சாதிபதி. அவன் அம்மா வழியில் அவனுக்கு ஏகப்பட்ட சொத்து. அழகானவன். ஒரே ஜாதிதான். நல்ல குணம் இருந்தாலும் பெண்ணைப் பெற்ற தந்தை அந்த பையனை மருமகனாக ஏற்க விரும்பவில்லை.

ஏன்

"பையன் அரசாங்க உத்தியோகம் பார்க்கவில்லையே சொந்த தொழில் அல்லவா செய்கிறான்" என் பல மாப்பிள்ளைகளை பெண்ணின் பெற்றோர்கள் நிராகரித்து விடுகிறார்கள்.

அரசாங்க வேலை பார்ப்பது நிம்மதியான வாழ்க்கைதான். மாதந்தோறும் நிரந்தர வருமானம் இதில் உண்டு. மாதம் ஒன்றாம் தேதி என்றால் சம்பளம் நிச்சம்.

வீட்டு வாடகை அரிசி, பருப்பு, பையன் படிப்பு, சினிமா என ஒரு லிஸ்ட் தயார் செய்து, அதன்படி பணம் ஒதுக்கி, ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை வாழலாம். ஆக தண்டாளத்தில் ரெயில் சீராக போவது போல வாழ்க்கை அமையும் என்பதற்காக தான்.

ஒரு பள்ளிக்கூட வாத்தியார் பள்ளி ஆய்வாளருக்கு பயப்பட வேண்டியது இருக்கிறது. ஒரு பள்ளி ஆய்வாளர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கல்வித்துறை டைரக்டருக்கும், கல்வித்துறை டைரக்டர் கல்வி அமைச்சருக்கும், கல்வி அமைச்சர் முதலமைச்சருக்கும், முதலமைச்சர் ஜனாதிபதிக்கும் பயப்பட வேண்டியது இருக்கிறது.

சொந்த தந்தை செத்துக்கொண்டிருப்பார். அவர் அருகில் இருந்து கவனிக்க வேண்டும். அப்போது லீவு கேட்டால் அரசு வேலை பார்ப்பவனுக்கு உடனே லீவு கிடைக்காது.

"ஆயினும் தன் பிள்ளை கல்யாணம் செய்து கொடுத்த இடத்தில் கண்கலங்காமல் இருப்பாள் என எண்ணி, மருமகன் அரசாங்க வேலை பார்ப்பவராக இருக்கவேண்டும், அழகு குறைந்தாலும் சரி, அவப்போது குடிப்பவனாலும் சரி என அவனது அந்தரங்கத்தைப் பற்றி கவலைப்படாமல் பல்லை இளித்துக் கொண்டு பல பெற்றோர்கள் பெண் கொடுக்க முன் வருகிறார்கள்"

ஏன் இந்த அவலம்.... இது மறைய வேண்டும்.

-------------------------------------------------------------------------------- 

 

 

[ கம்பியூட்டர் ] [ இலக்கியம் ] [ சமூகம் ] [ பொது ] [ மேலும் ]

Back

இலவச சுட்டிகள்

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on 26/02/2007