» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

பிரிண்டரில் உள்ள சிக்கல்களை தவிர்க்க....
 

லேசர் பிரிண்டர்களுக்கு இணையான பிரிண்ட் தரத்தை தரும் இங்ஜெட் பிரிண்டர் களை பயன்படுத்துவோருக்கு அடிக்கடி பொதுவான சிக்கல்கள், பிழைகள் ஏற்பட பெரு மளவில் வாய்ப்புண்டு. பிரின்ட் எடுக்கும் போது சில சமயங்களில் கோடு, கோடாக திட்டுத் திட்டாக வருகிறது. அடிக்கடி கேட்ரிஜை வெளியே எடுத்து வைத்தால் தூசு படிந்திருக்க வாய்ப்பு ஏற்படும். எனவே அடிக்கடி கேட்ரிஜ் அதை பொருத்தும் இடங்களை சுத்தம் செய்ய வேண்டும். சில வகை பேப்பர்கள் கேட்ரிஜ் மையை சரியாக பற்ற முடியாதவையாக இருக்கும். இதனால் பிரிண்ட் அவுட் எடுக்கும் போது பேப் பரில் ஆங்காங்கே திட்டுத் திட்டாக மை படர்ந்திருக்கும்.

எனவே பிரிண்ட் அவுட்களுக்குகென்றே உள்ள பேப்பர்களை பயன்படுத்துவது நல்லது. கலர் பிரிண்டர்களில் பிரிண்ட் எடுக்கும்போது சில அடர்த்தியான வண்ணங் களையும் குறிப்பிட்ட சில வண்ணங்களையும் கொண்டு வர கேட்ரிஜ் மையானது குறிப்பிட்ட விகிதத்தில் வண்ணங்களை கலந்துஅதிகளவில் உறிஞ்சப்படும். எனவே பேப்பரில் அதிகப்படியாக மை அச்சாகி வண்ணங்கள், திட்டு திட்டாக தெரியும். எனவே பிரிண்ட் எடுக்கும் போது எக்க னாமிக் மோடில் வைத்து பிரிண்ட் எடுக்கவும்.இங்க்ஜெட் பிரிண்டர்கள் பேப்பரில் திரவமையை எழுத்துக்களாக தெளிக்கும். மை உலர்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். எனவே பிரிண்ட் ஆனவுடன் ஈரக்கை களால் தொடவோ, தேய்க்கவோ கூடாது. இங்க் ஜெட் பிரிண்ட் எடுக்கும் மையானது நாசில்கள் என்னும் சிறு துளை வழியாக பீய்ச்சி அடிக்கும்.

ஒரு சில நேரங்களில் இந்த நாசில்களில் மை கட்டிப்போய் அடைத்திருக்கும். அவ்வப் போது அடைப்பு ஏற்படக் கூடும் என்பதனால் நாசிலை சுத்தம் செய்ய வேண்டும். பெரும் பாலான பிரிண்டர்களில் காட்ரிஜ் மையின் அளவு எந்த நிலையில் உள்ளது என்பதை உணர்த்த இங்க் ஸ்டேட்டஸ் இன்டிகேட்டர் என்ற விளக்குகள் இருக்கிறது. இவை மின்னி எரிந்தால் மை தீர்ந்து விட்டன என அறிந்து கொள்ளலாம். பிரிண்டரில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு இருக்கும் போது தேவையில்லாமல் ஒரு சில சமயம் சப்தங்களை எழுப்பும். அது போன்ற நேரங்களில் அள வுக்கு அதிகமாக மையை பயன் படுத்தக்கூடிய பிரிண்ட் அவுட்கள் அதாவது கறுப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் போன்ற பிரிண்ட் அவுட்களை எடுக்கும்போது மை அதிக அளவில் வெளிப்பட்டு அது கேட்ரிஜ்களிலும் பிரிண்டரில் நகரக்கூடிய பகுதிகளிலும் படிந்து விடும் வாய்ப்புகள் உள்ளன.

இதை கவனிக்காது பிரிண்ட் எடுக்கும் போது கேட்ரிட்ஜிலும் நகரக்கூடிய பகுதிகளிலும் உள்ள இங்க் படிவுகள் சத்தத்தை எழுப்பக்கூடும். அதை தவிர பிரிண்டரில் நகரும் பகுதிகள் அதிகமான இயக்கத்தினால் செயலிழந்து சத்தங்களை எழுப்பக்கூடும். பெரும்பாலும் கேட் ரிட்ஜை பிரிண்டரில் பொருத்துவ தற்கு முன் அதை திறக்க வேண்டும். பிரிண்டரில் அடிக்கடி பிரிண்ட் அவுட்கள் எடுக்க வேண்டும். பிரிண்டரில் வேலை முடிந்த பின் உடனேபிரதான மின் இணைப்பை துண்டித்துவிட வேண்டாம். பிரிண்டரில் உள்ள பவர்-ஆப் பட்டனை பயன் படுத்துதல் நல்லது. ரோலர்கள் மீது கண்டிப்பாக தூசு, அழுக்கு கள் படர்ந்திருக்கும். இவற்றை நீக்க பிரிண்டரின் மேல் மூடி மற்றும் டிரேவை அகற்றிவிட்டு சுத்தமான பருத்திதுணியை கொண்டு துடைத்த பின்னர் சோதனை பிரிண்ட் அவுட் எடுத்து பார்க்கலாம். கேட்ரிட்ஜின் நாசில் பகுதியில் அழுக்கு, தூசுபடிதல் அல்லது இங்க் உலர்ந்து பிடித்து கொள்ளுதல் போன்றவற்றால் பிரிண்ட்அவுட் பேப்பரில் கோடுகள், புள்ளிகள் போன்றவை ஏற்படும். இவற்றை நீக்கி கேட்ரிட்ஜைசுத்தப்படுத்த வேண்டும். இதற்கு முதலில் நாசில்களை சுத்தப்படுத்த வேண்டும்.

கேட்ரிட்ஜை அகற்றி ஒரு தாளின் மீது வைக்கவும். கேட்ரிட்ஜின் வடிகால் பகுதியை முதலில் நனைத்த துணி கொண்டு லேசாக துடைக்க வேண்டும். பின்னர் கேட்ரிட்ஜ் ஹெட்டை தொட்டுக்கொண்டு இருக்கும் பேடுகளை ஈரத்துணி கொண்டு துடைக்க வேண்டும். பின் ஹெட்டை சுற்றியுள்ள இடங்களையும் லேசாக துடைத்துவிட்டு மீண்டும் பிரிண்டரில் சோதனை பிரின்ட் அவுட் எடுத்துப் பார்க்க வேண்டும். இது போன்ற முறை களினால் பிரிண்டரில் ஏற்படும் பெருமளவிலான சிக்கல்களை தவிர்க்கலாம்.
 


-------------------------------------------------------------------------------- 

 

 

[ கம்பியூட்டர் ] [ இலக்கியம் ] [ சமூகம் ] [ பொது ] [ மேலும் ]

Back

இலவச சுட்டிகள்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on Wednesday, 03/01/2007