செம்மொழி தமிழினை
உயர்வுறச் செய்திடும்
திருப்பணி செய்து
மகிழ்ந்திடுவோம்!
ஞானமும் கேள்வியும்
ஞாலத்தில் தழைத்திட
பாரதம் கல்விக்கூடமாய்
திகழ்ந்திடச் செய்வோம்!
விந்தைகள் செய்திடும்
வ்ஞ்ஞானமும் செய்து
வையகத்தாரை
வியந்திடச் செய்வோம்!
பாரத மைந்தர்
ஒற்றுமைக்கொரு
உதாரணமென்று
உணர்ந்திடச் செய்வோம்!
பாரத மகவெனில்
பாரினில் புகழ்ந்திடும்
காரியம் யாவும்
புரிந்திடுவோம்!
உலகே வியக்கும்
உன்னத அன்பினில்
உயர்வுறும் மனிதராய்
திகழ்ந்திடுவோம்!
***************************************************
நன்றி நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.
-------------------------------------------------------------------------------- |