தேசமெங்கும்
சாதிய விஷம்!
மனிதம் ....
மறுபடியும் மன்றாடுகிறது
தேசத்தின்
வாசல்தோறும் வன்முறைகள்!
நாசக்காரர்களோடு
தேசத்தின்மீது
பாசமற்றவர்கள்
ஒன்றிய தேச வீணை
நரம்பறுந்து ....
அபஸ்வரம் தருகின்றதே
தேசவில்வின் ...........
ஒற்றுமை நாண் ஏன் இன்று!
இற்று விட்டது?
தேசவிசுவாசம் ஏன்
செத்து விட்டது?
அன்று ....
மனிதரிடையே
சீனப் பெருஞ்சுவராய்!
மதம் குறுக்கிட்டது
மகாத்மாவை பலி கொண்டது
காந்திகளின் பலி
இன்னும் தொடர்கின்றது
இன்று . ....
இனவுணர்வுகள்
இந்தியாவை
துண்டுபோட நேரம் பார்க்கின்றதே!
கரம் சேர்க்கப் பிறந்தவர்களே ....
நிறம் பார்க்காதீர்!
இனம் பார்க்காதீர்!
பூக்களாய் கரம் சேர்ப்போம்!
இந்தியாவைக் காப்போம்!
நன்றி அகமது முகைதீன்
-------------------------------------------------------------------------------- |