|
|
நானே பாடுவேன் வாடா கண்ணா வா!
நானே பாடுவேன் வாடா கண்ணா வா!
கீரை விதைப்போம் கீரை விதைப்போம்
வாடா கண்ணா வா!
கீரை விதைத்தால் கோழி கிளறும்
போடா வரமாட்டேன்!
கோழி கிளறினால் வேலி போடலாம்
வாடா கண்ணா வா!
வேலியை ஆடு தாண்டிவிடுமே
போடா வரமாட்டேன்!
கீரை விதைப்போம் கீரை விதைப்போம்
வாடா கண்ணா வா!
கீரை வளரத் தண்ணீர் வேண்டுமே
போடா வரமாட்டேன்!
கேணி நீரை இறைத்துக் கொள்ளலாம்
வாடா கண்ணா வா!
கீரை வளர்ந்தபின் என்ன செய்வது?
போடா வரமாட்டேன்!
கீழைத் தெருவில் விற்று விட்லாம்
வாடா கண்ணா வா!
விற்ற பணத்தை என்ன செய்வது?
போடா வரமாட்டேன்!
வீணாக்காமல் வங்கியில் சேர்ப்போம்
வாடா கண்ணா வா!
வீடும் நாடும் வாழ்த்த வாழ்வோம்!
வா வா அண்ணா வா!
-------------------------------------------------------------------------------- |
Back |
|