|
எங்கள் கன்னியாகுமரி மாவட்டம்
|
மும்மதங்கள் சங்கமிக்கும் தெருப்பள்ளி
முன்னோர்கள் நினைவாக வாவுபலி
வானுயர உயர்ந்து நிற்கும் மலைகளடு
கதைபேசி விளையாடும் கார்மேக முகடு
காலைக்கதிரால் தாமரை தான் கண்விழிக்கும்
பள்ளி, கல்லூரிகளினால் அறிவுக்கண் திறக்கும்
படித்தவர்கள் நிறைநதவொரு மாவட்டம்
பண்பாட்டு நெறிபிறழா சிறுதோட்டம்
பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணையும்
சிற்றாறு ஒன்றிரண்டு வகையும்
சேற்றாடி சோறாக வழிவகுக்கும்
செவ்வாழை தென்னை வகை வான் உயரும்
வள்ளுவரின் திருவுருவச் சிலையும்
மாத்தூரில் தொங்குபால நிலையும்
ஆசியாவில் மிக உயர சின்னங்கள்
குமரியன்னை படைத்தளித்த புருவங்கள்
இலகரங்கள் கேட்டிடும் வரதட்சணை
எங்கள் மாவட்டத்தின் அவலட்சணம்
இதைத்தடுக்க இன்றேநாம் சூளுரைப்போம்
குறை நீக்க அறமென்னும் வாளெடுப்போம்
-------------------------------------------------------------------------------- |
Back |
|