|
முரசு - மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார்
|
வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்.
பிள்ளைகள் பெற்றதப் பூனை - அவை
பேருக் கொருநிற மாகும்
சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந் தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்றமென் றுஞ்சொல்ல லாமோ?
ஒன்றொன்று கொட்டு முரசே - அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே
நன்றென்று கொட்டு முரசே - இந்த
நானில் மாந்தருக் கெல்லாம்.
-------------------------------------------------------------------------------- |
Back |
|