|
மனிதா,
நாவும், மனதும்
உன்கட்டுக்குள்
இருக்கும் வரை - உன்னை
வெல்ல யாராலும் இயலாது
அதையும் மீறி, உன்
நாவை அதன் விருப்பத்திற்கு
விளையாடவிட்டால் - அது
உன் நண்பர்களையும்
எதிரிகளாக மாற்றி
எதிரிகளை வலுபெறசெய்து
உன்னை வலுவிழக்க செய்து விடும்!
உன்,
இதயத்தை அதன் விருப்பத்திற்கு
அலைபாயவிட்டால் - அது
உன்னை தவறான வழியில்
அழைத்துச் சென்று - உன்னுடைய
நற்பெயர்களை எல்லாம் அழித்து
உன்னை யாவரும் வெறுக்குமளவிற்கு
தீயவனாக மாற்றி விடும்!
ஆகவே மனிதா,
நான் உனக்கு கூற நினைப்பது என்னவென்றால்
இவ்விரு கொடியவர்களுக்கு
நீ அடிமையாக இருப்பதை விட
அவர்களை நல்லவராக மாற்றி
உன்னடிமையாக வைத்துக் கொள்.
அதுவே,
உனக்கும், உன் எதிர்காலத்திற்கும்
மிகவும் பாதுகாப்பான
கவசமாகும்.
நன்றி T. வித்ரா
-------------------------------------------------------------------------------- |