என் ஆழ் மனத்தின்
யதார்த்தங்களின் அலைகள்
எந்தக் கரையிலும் மோதுவதில்லை
அதன் சலனமின்னமையின் சப்தங்கள்
மிரட்சிபடுத்தக் கூடிய வேளையில்
என் நடத்தலின் ஊடாக
நடை—றும் தடுத்தல்கள்
தாவிய படி தாண்டியிருந்த கால்கள்
தடுக்கி விடுதலையும் கூட
பொருட்டாக்குவதில்லை
எல்லாவற்றையும் கடத்தல் மட்டுமே
அவற்றின் இறுதிகளாய்
எல்லாச் சுமைகளையும்
வண்ணங்களாக்கி
சிறகில் சுமந்து
தேன் தின்று திரியும்
பட்டாம்பூச்சி நான்
-------------------------------------------------------------------------------- |