எதிர்பர்ப்புகள் ஏமாற்றங்களை நிறைத்திட்டாலும்…
துவளாமல் தொடர்வோம்
தன்னம்பிக்கையின் பாதையில்..!
உதயத்தைத் தேடும் உள்ளங்களுக்கு
ஒவ்வொரு நாளும் புதிதாகத் தோன்றும்!
காவியங்களை எழுதிட
காகிதங்கள் மறுத்திட்டாலும் கூட
நல்ல சரித்திரங்கள்
னெஞ்சங்களில் எழுதப்படும்!
உயர்வினை அடைந்திட…
உழைக்கத் துடிக்கும்
உள்ளங்களுக்கு…
உற்சாகமும் ஊக்கமும் நிச்சயம் தேவை!
கவலைகளை – உயிர் கெடுக்கும்
வேதனைகள் ஆக்கிட வேண்டாம்!
வேதனைகள் பொடிப்பொடியாகி விடும்
காரியத்தில் கவனம் வைத்தால்!
எல்ல ரணங்களையும் காலம் ஆற்றி விடும்
லட்சிய வாழ்வை மேற்கொள்வோர் தமக்கு!
வருடக்கணக்கில்
வருடிக்கொள்ளும்
வருமைகளும்,வேதனைகளும்
ஒரு சில வெற்றிகளின் உதயத்தில்
மறைந்து போகும்!
(தொடரும்)--
Nagai.S.Balamurali.Chennai.
நன்றி எழுத்தாளர் நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.
(முன்பாகம்-3) (பாகம்- 4) (அடுத்த பாகம்-5)
-------------------------------------------------------------------------------- |