தேர் பவனி வரும் சுசீந்திரமும் நீயே,
குளிர் தென்றல் வரும் சாயந்திரமும் நீயே
நான் சுற்றும் பம்பரமும் நீயே,
என்னை இயக்கும் இயந்திரமும் நீயே.
தாமிரபரணியின் ஓடமும் நீயே
தாமரையின் தடாகமும் நீயே
முக்கடலின் முத்தும் நீயே
முத்தமிழின் சொத்தும் நீயே
தோவாளையின் பூச்சரமும் நீயே
செவ்வாழையின் இதழோரமும் நீயே
குமரி அன்னையின் மைதிலியும் நீயே
நான் விரும்பும் காதலியும் நீயே
*************************************************
நன்றி (கே. ஆர். ராஜன்)
-------------------------------------------------------------------------------- |