அடி என் வாடாமல்லி பூவே
உன்னை நினைக்கும்
என் நெஞ்சம் மட்டும்
ஏன் வாடுகின்றது?
அடி என் சாமந்தி பூவே
உன்னை காதலிக்கும்
என் சமாதிக்காவது
உன் வாசம் வருமா?
அடி என் காதல் சமுத்திரமே
உன் இதயத்தின் ஓரத்திலாவது
ஒரு காகித கப்பல் விட
சம்மதம் கொடுப்பாயா?
அடி என் வணிகவியல் குமாரியே
கணக்கு படிக்கும் நீ
என் மன கணக்கை
அறிய மாட்டாயா?
*************************************************
நன்றி (கே. ஆர். ராஜன்)
-------------------------------------------------------------------------------- |