தூங்கும் போது என்னுடன் தூங்கி
விழிக்கும் போது என்னோடு
துயில் எழும் - உன்
நினைவுகளை தூக்கி எறிய நினைத்தும்
போகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும்
உன் நினைவுகளோடு
ஓடிக்கொண்டிருக்கிறேன்
என்னை மறந்து என் நினைவுகளை
தூக்கி எறிந்து விட்டு விடைபெற்று செல்ல
உன் மனம் ஒத்துக் கொண்டது
ஏன் !
ஆஸ்மி (நாகர்கோவில்) |