|
அன்புள்ள
நண்பரே,
தேடுதலில் தென்பட்ட தங்கத்தோட்டத்தில் முதல்முதலாக நுழைந்து கருத்துப்
பதிய முனைந்தபோது ஏதோ என்
தவறுதலால் இ-மெயில் பெயில்டு என ஏற்பு மறுக்கப்பட வருத்தத்துடன்
தளம்விட்டு வெளி வந்தேன். பின்னர்
உறுப்பினராகி என் படைப்புகளையும் தளத்தில் பதித்துவிட்டேன். இப்போது
என் கருத்தை கவிதையாகத் தருகிறேன்
இத்தளத்தில் பதிய கருத்து - கவிதை இதோ:-
கருத்து - கவிதை
கலைத்தோட்டங்கள் – எங்கள்
50வலைத் தமிழ்த் தோட்டங்கள்
முறையாகப் பகுத்ததில் வளர்ந்த
பலவண்ணப் பூக்கள்
மணம் வீசும் பாருங்கள்
கருத்துக் கட்டுரைகள்
சிறந்த நற்கவிதைகள்
சிரிக்கச் சிரிக்க நகைச்சுவைகள்
சிந்தனைக்குரிய கதைகள் – மற்றும
வசதியான தேடுதலும்
மிளிரும் அதன் அமைப்பும்
சிரியவர், பெரியவர்
யாவரையும் ஈர்க்கும்
இதுதான் தமிழ்த் தோட்டம்
ஒரு பூவைக் கிள்ளி சுகமாகத்
தலையில் வைப்பதுபோல்
நண்பர், உறவினர்களுக்கு
ஒரு சோறு பதமாக ; இ – மெயிலில்,
அனுப்ப இயல்வில்லை என
வருந்துவோர்க் கொரு வார்த்தை
"பூக்களைத்தான் பறிக்காதீர்கள்"
தள முகவரி அவர்களுக்கும் தந்து
விரல்கள் சுட்ட கண்வழி நடந்து
அவர்களுடனும் சேர்ந்து
தோட்டங்களில் வலம் வாருங்கள்
தோட்டத்தின் அழகில்
கவரும் மணத்தில்
கண்ணும் ம்னமும் குளிரும் பாருங்கள்
மொத்தத்தில் ஒரு வார்த்தை ஆங்கிலத்தில்
“ Yes It is a well ordered Garden
with varieties in fragrance “
பின்குறிப்பு (ஆசிரியருக்கு)
இல்லை இழப்பெனினும்
இ-மெயில் வசதியும் அழகுதானே
தமிழ்த் தோட்டத்திற்கு.
சிரமம் மிக வேண்டாம்
எளிதில் முடியுமென்றால்
முயன்று பாருங்கள்
அன்புடன்
கண்ணபிரான். G
ஆசிரியர் பதில்
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை, ஆகவே முயற்சிப்போம்... |