|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில் உங்கள் படைப்புகளும் வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அம்மா
நான் பிறந்த போது
அழுதேன்
"அம்மா" என்று - ஆனால்
உண்மையில் அர்த்தம் தெரியாது
"அம்மா" என்ற அமுத வார்த்தைக்கு
இந்நாள் வரையில் ....
நான் உனக்கு மகனாக பிறந்தது
நீ செய்த தவமா! - இல்லை
கடவுள் எனக்கு கொடுத்த வரமா!
தொப்புள் கொடிக்கும்
தொடர்ந்து வருகின்ற உறவுக்கும்
தொடர் கொடி இல்லை - எஎன்
மனித வாழ்வில் ...
உயிருக்கு உரமிடுபவன் தாய் - என்
உயிருக்கு உரமிட்டு - என்ன
பாறை நிலத்தில்
படுக்க வைத்து விட்டாள்
பத்து மாதம் சுமந்ததது நீதான்
பத்து நிமிஷம் கூட - உன்
பார்வையில் சுமக்க விலைலையே!
காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சு - ஆனால்
என் தாய்க்கோ! ....
உன் கரம் பிடித்து
நடந்தே பழக்கம்
இப்போது ஏன்
நான் தனியாக - நடக்கிறேன்
என் உறவே
வேண்டாமென
உதறி சென்று
விட்டாயே
ஏன்?
எனக்கு ஒரே ஒரு ஆசை
நான் வாழ்கின்ற பூமியில்
நீயும் வாழ்ந்தாக வேண்டுமென்று ...
அதற்குள் ஏன் மறு பிறவி
தேடிக்கொண்டாய்...
பாசத்தை வெளியில் காட்டிவிட்டு
இதயக்கூட்டில் தேடுகிறேன்
எங்கே என்று ...
அம்மா!
கல்லறையை பிளந்து
கருவறைக்கு வா
எனக்கு மகளாய் பிறப்பாய் என்று ..
அடுத்த ஜென்மம் என்று
ஒன்று இருந்தால்
கல்லான நெஞ்சை எடுத்து விட்டு
கனிவான உள்ளத்துடன் வா!
அன்பின் மகனாக
ஏழைகளின் அரசனாக பிறக்க
நான் வருகிறேன்!....
நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ் ஈரோடு
கைபேசி:
9095806748
|
சார்லஸ்-ன்
படைப்புகள்
படைப்பாளர்கள் பக்கம் |
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|