வண்ணத்துப்பூச்சி !!
பின்னால் எந்த வரலாறும் இதற்கு இல்லை
இது நொடிபோல் பிரிந்திருக்கிறது
தன்னைச் சுற்றியே சிறகடிக்கிறது.
இதற்கு நாளை என்பது இல்லை
தொடர்பில்லை நேற்றுடனும்
இது இன்றுகூட பலபொருள் காட்டி
மயக்கும் சிலேடையாய்.
சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி இது ..!
இந்த சோகமான மலைகளை வைத்திருக்கிறது
தன் இறகுக்குக் கீழேயே.
சின்னஞ் சிறு மஞ்சள் நிறமாய்
திறக்கிறது மூடும்முன், திறக்குமுன் மூடுகிறது
அட ..!!
எங்கே அது ..??.
கவிஞர் கோலேட்கரின்
butterfly
ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பு
- முத்து |