Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 March 03, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

காதலில் சில

 

உன்னிடம்

சொல்லாத வார்த்தைகளே

என்னை காதல் கொள்ளும்போது

நான் சொல்லிவிட்ட வார்த்தைக்கு

நீ காதல் அனுமதி

தர மறுத்து

வீணாய் எனையேன் கொல்கிறாய்...?


----o0o----


உன்னை காணாத

ஒவ்வொரு வினாடியும்

வீணாய் போகிறதே யென்று

வருத்தத்துடன்

உரையாடிக்கொண்டிருக்கிறது

கடிகார முட்கள்...!


----o0o----


காதல் தவறில்லை

என்றுரைத்த

என் நண்பனிடம்

கோபப்பட்டத்தை

தவறென்று உணர்கிறேன்

இன்று

உன்னை கண்டபின்னால்...!


----o0o----


காதல் மறுப்பை

பெருமிதமாய் பேசித்திரியும்

பெரியோர்கள் அறிவார்களா

பிறப்பின் அடித்தளமே

காதலென்று...!


----o0o----


நீ என்னை

காதல் செய்ய மறுக்கும்

இக்கணத்தில்

என் தமனியும் சிரையும்

சிறைபட்டுக் கிடக்கும்

இதய போராட்டத்தை

உணர்வாயோ...?


----o0o----


நான் பேருந்து படியினில்

தொற்றிக்கொண்டு

பயணம் செய்து வரும்

காலைநேர சாலையெங்கும்

உன் மீதான காதலும்

என்னோடு தொற்றிக்கொண்டு

பயணிக்கிறது

பேருந்தை விட்டு

நீ கீழறங்கி

சென்ற பின்பும்...!


----o0o----


காதல் இல்லையென்று

சுற்றித்திரிந்த

நாட்களையெல்லாம்

காட்சிப் பொருளாய்

நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருக்கிறேன்

என் காதலியே

உன்னிடம் காண்பிப்பதற்காய்...!


----o0o----


கனவு காணும்போது

தேவதை வருவாளென்று

நண்பன் சொன்னது

இன்று

பொய்த்துப்போனது

நீ அருகில் வரும்போதேல்லாம்

கனவு வருவதால்...!


----o0o----


கண்ணுக்குள் பேசி தீர்த்த

வார்த்தைகள் யாவும்

உதடு வழியே

உமிழப்படும் போது

கவிதையாகி விடுவதாய்

நீ சொன்னாயே

அது உண்மைதானோ...!


----o0o----


உன்னை நான்

காணாது போய் இருந்தால்

மீண்டிருப்பேன்

இன்று

உன்னை கண்டதினால்

காணமல் போய்விட்டேன்

இதுதான் காதலோ...!

......................................................................................

நன்றி

 

பாலாஜி.ச.இமலாதித்தன்

பாலாஜி.ச.இமலாதித்தன் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]