|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
உறங்காப் பொழுதுகள்
சந்திக்கும் போதெல்லாம் சகஜமாய் பேசிச் சென்றாலும் உன்னைக் காணாத நாட்களின் உறங்கா இரவு நேரங்களிலெல்லாம் நரகத்தை கண்டேனடி... நண்பர்களிடம் அரட்டையென்பதே அடியோடு மறக்கடித்து உறங்காமலே நாள் முழுவதும் உன்னோடு உரையாட என் மனதும் துடிக்குதடி... உன் விழிகள் இரண்டும் நிலவாகி போனதாலோ என்னவோ என் உறங்கா நாட்களில் இரவும் முடியாமல் பகலென்பதே விடியாமலே கிடக்குதடி... விழித்திருக்கும் நேரங்களிலும் கனவாக வந்துச் சென்றும் உறக்கத்தையும் பறித்துக்கொண்டதால் என் படுக்கையறையில் உளறலோடே தினமும் புரளுகிறேனடி... உன் நினைவுகளோடு அசைபோடும் உறங்காத இரவிலெல்லாம் கொசுக்களின் ரீங்காரம் கூட இதமான ரிதமாக என் செவிக்குள்ளேக் கேட்குதடி... இப்போதெல்லாம் உறக்கமேன்பதே இரவில் இல்லாத காரணத்தால் அலுவலகத்தில் முழுநேர வேலையிலும் உருப்பிடியாய் இடையிடையே உறங்குவதும் ஒரு வேலையென உருமாறி போனதடி... அச்சிறுசிறு உறக்கங்களின் ஊடாகவும் உன் குறுஞ்செய்தி குறுக்காய் வந்துவந்து என்னை எழுப்பிவிட்டு கைக்கொட்டிச் சிரிக்குதடி... உன் நினைவுகளினால் தூக்கமே இல்லாததாலேயே கிறுக்குக் பிடித்தாற்போல் அனுதினமும் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் கிறுக்கல்களாய் நானடி...!
......................................................................................
நன்றி
பாலாஜி.ச.இமலாதித்தன் |
பாலாஜி.ச.இமலாதித்தன் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|