Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 December 09, 2009

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

அகநானூறு காட்டும் பரத்தமை

 


சங்க இலக்கியத்தின் மேன்மையைப் பறைசாற்றும் நூல்களுள் அகனாநூறுக்கெனத் தனியிடம் உண்டு. அதன்கண் 400 பாடல்கள்உள. அவை, குறிஞ்சித்திணையில் 40 பாடல்களாகவும், முல்லைத்திணையில் 40 பாடல்களாகவும்,நெய்தல்திணையில் 40 பாடல்களாகவும், பாலைத்திணையில் 240 பாடல்களாகவும் அமைந்துள.அவற்றுள் மருத்திணை சார்ந்துள்ள 40 பாடல்களில் பரத்தமை குறித்த செய்திகள் உள. அதனுள் தலைவி கூற்றாக 97 பாடல்கள் உள.அவற்றுள் 11பாடல்களில் பரத்தமை குறித்தசெய்திகள் உள.அவற்றை ஆராய்ந்து வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம.;


மருதத்தினையில் உள்ள 40 பாடல்களில்39 பாடல்களை இயற்றியோர் தொகை 21. ஏனைய ஒரு பாடலை இயற்றியவர் பெயர் தெரிந்தில.

பரத்தை என்னும் சொல் தொல்காப்பியத்தில் பயின்று வந்துள்ளது. அச்சொல் ஓரிடத்து மட்டும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்’ என்று வந்துள்ளது. இவ்விடத்து வந்துள்ள பரத்தை என்ற சொல் அயன்மை என்ற பொருளைத் தருகிறது. ஏனை இடங்களிலெல்லாம் பொதுமகளிர் என்ற பொருளையே அது புலப்படுத்துகிறது.

திருமண உறவாகிய மனைவிக்கு அயலாகப் பிற பெண்ணை நாடுதலே பரத்தமையென வழங்கப்பெற்றது.பர என்ற வடசொல்லின் பொருள் மரபுக்கு மாறான’ என்பதாகும்.மரபுப்படி களவில் காதலித்து தலைவனை வரைந்துகொள்பவள் தலைவி. அதற்கு மாறாகத் தலைவனை அடைய எண்ணுபவளே பரத்தை ஆவாள்.


பரத்தை என்பதற்கு “prostitute” என்ற ஆங்கிலச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.இது பொருள் கருதி அல்லது ஏதேனும் ஒரு பயன் கருதி ஒன்றற்கு மேற்பட்டவரோடு உடலுறவு கொண்டு வாழ்பவளைப் பொருள் நோக்கில் குறித்து நிற்கிறது.

“பரத்தை’என்ற சொல் மூன்று நிலைகளில் பொருள்கொள்ள வாய்ப்பு நல்குகிறது.அவை 1.முறையற்ற உடலுறவு 2.பொருட்பயன் 3.அன்பின்மை என்பனவாகும்.

சங்ககாலத்திலிருந்த பரத்தையர் நிலையை இரு நிலைத்குள் அடக்கிக் காட்ட இடமுண்டு.அவை 1.திருமணமின்மை 2.பொருட்பயன் என்பனவாகும்.தலைவன் அன்பு கருதி அவனிடமே வாழுதின்ற இற்பரத்தை.பொருள் ஒன்றே கருதிப்பலரையும் மருவும் சேரிப்பரத்தை என்ற நிலையே அவையாகும்.

பரத்தை என்பதற்கு அயன்மை என்ற பொருளைக்கொண்டு திருமணத்திற்குப் புறம்பான உறவு என்று பொருள்கொள்வது பொருத்தமாகும்.தலைவன் மணமுடித்த மனைவியைத் தவிரப் பிற பெண்ணை நாடும் நிலை பரத்தமை எனப்படும்.அவ்வாறு நாடும் பெண் கன்னியாகவோ மணமுடித்த பிறபெண்ணாகவோ இராள்.பொதுமகளாகவே இருப்பாள். தந்தை வழிச் சமுதாயத்தில்; சொத்துக்குரிய வாரிசுதளைத் தருவதற்கென கற்புடைய பெண்களும்;; பாலுணர்ச்சித் தேவைகளை நிறைவு செய்வதற்கென பரத்தையரும் இருந்தனர் என்பர் நரேந்திரநாத் பட்டாச்சார்யா. உலகத்தில் பரத்தமை தொன்மையான தொழிலாகக் குறிக்கப்படுவது இதன் பழமையைக் காட்டும் என்பர் சிமொன்-டி-பியேவியர்.இப்பரத்தமை ஒழுக்கம் நினைவிற்கெட்டாத நெடுங்காலமாக இருந்து வந்ததாக அறிஞர் கூறுவர் என்பர் குருமுக்ராம்.


பெண்ணின் நிலை தாழ்வாக உள்ள கீழைநாட்டுச் சமூகங்களில் பாலுணர்ச்சி வெளிப்பாட்டிற்கு வேறு இடங்களை நாடுகின்ற கணவனையோ மகனையோ தட்டிக்கேட்கும் உரிமை பெண்களுக்கு இல்லை. அத்தகு சூழலில் பரத்தமை ஏற்றுக்;கொள்ளப்பட்டதாகவும் அதனால் குடும்பம் பாதிக்கப்பட்டதாகவும் கொள்ளப்படுகிறது என்பர் பாயுல்லான்டி.



தலைவி கூற்றில் பரத்தமை:
தலைவி கூற்றாக அகநானூற்றில் 97 பாடல்கள் உள.அவற்றுள் 11பாடல்களில் பரத்தமை குறித்த செய்திகள் உள. அவை அனைத்தும் மருதத்தினைப் பாடல்களே.இந்நிலத்தில் வளமலிந்து இருந்தது. அதனால் இங்கு வாழ்பவர்களிடையே விலைமகளிருடன் இன்பம் நுகரும் வழக்கம் இருந்தது.

தலைவனின் பரத்தமைப் பண்பும்,அப்பண்பு நிகழ்ந்த காலமும் தலைவி கூற்றுப் பாடல்களில் வெளிப்படுகின்றன.பாலுணர்வைச் சீர்படுத்த அமைந்த திருமணம் சிலரது தேவைகளை நிறைவேற்றுவதில்லை.தங்கள் தேவைகள் நிறைவுபெறாத சூழலில் ஆடவர்கள் பரத்தையரை நாடுகிறார்கள்.


தலைவனொருவன் தலைவி கருவுற்றிருந்த காலத்தில் பரத்தையைநாடியுள்ளான். மனைவியின் புப்பின்போதும், புனிற்றுக்காலத்தின்போதும் தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடியுள்ளான்.அவன் பெரும்பான்மை அவனின் தலைமகள் மகப்பேறு அடைந்த பின்னரே பரத்தையை நாடியுள்ளான் என்பதற்கான குறிப்புகள் இவள் பாடல்களில் உள.

“புதல்வாற் தடுத்த பாலொடு தடைஇ
திதலை அணிந்த தேம்கொள் மென்முலை
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே
தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே” (அதநா.26)


கற்புக் காலத்தில் தலைவனுடன் பரத்தை புனலாடியதாகக் குறிப்புகள் உள.தலைவன் முதல்நாள் பரத்தையுடன் புனலாடி மகிழ்ந்ததை அவனிடமே அடுத்தநாள் தம் இல்லிற்கு வருந்தருணத்தில் எடுத்துரைக்கிறாள்.தலைவன் நிகழ்த்தி வந்த செயலினைத் தலைவியது உள்ளம் ஏற்கவில்லை.அவனது செயல் குற்றமுடையதேயென எண்ணுகிறது.அதனால் தலைவனைத் தலைவி ~மாயப்பரத்தன்|(அகநா.146)எனச் சாடுகிறாள்.பரத்தை தழுவி இன்புற்றமார்பையான் தீண்டமாட்டேன். ஆகவே நீ என்னை அணுகாதொழிகஎன்கிறாள். இதனால் பரத்தமைப்பண்பு கடியப்பட்டது புலனாகும். தலைவன் முதல்நாள் பரத்தையுடன் இன்பமெய்தி அடுத்தநாளே தலைவியை எய்தியிருக்கிறான்.இக்கருத்துக்களை மெய்ப்படுத்தும் வகையில்,

“குழைமான் ஒள்இழை நீவெய் யோளொடு
…………………………………………
நெருநல் ஆடினை புனலே இன்றுவந்து”(அகநா.6)
“நெருநல் ஒருத்தியொடு”(அகநா.66)
என்ற அடிகள் உள்ளன. ~நெருநல்| ~இன்றுவந்து| என்ற சொற்கள் அதற்குச் சான்றாக அமையும். தலைவன் பொழில்களில் பரத்தையுடன் மகிழ்ந்துள்ளான். இந்நிகழ்வை சங்ககாலச் சமூகம் குற்றமாகக் கருதவில்லை.

“வருபுனல் வையை வார்மணல் அகன்துறை
திருமருது ஓங்கிய விரிமலர்க் காவில்
நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப”(அகநா.36)

வையைக் கறையில் தலைவன் பரத்தையுடன் பொழிலாடலை நிகழ்த்தியிருப்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன.அக்காலத்தில் மதுரையில் பரத்தையர் பெருகியிருந்தமையை இதனால் உணரமுடியும்.

~சேரி| என்ற சொல் சங்ககாலத்தில் பொதுவாகக் குறிப்பிட்ட குழுவினர்சேர்ந்து வாழுமிடத்தைக்குறித்துள்ளது.அதற்குச் சான்றாக உமண்சேரி,பாண்சேரி,பார்ப்பணச்சேரி என்பவை அமைகின்றன.பரத்தை தான்வாழுமிடத்தை~எம்சேரி|(அகநா.76) என்கிறாள.;பரத்தையர்கள் தங்களுக்கெனத் தனியிடத்தை அமைத்துக்கொண்டும், தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டும் வாழ்ந்துள்ளமை இதனால் புலனாகும். சமூகத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் இருந்தமையும் தெளிவுபடும்.

தலைவன் பரத்தையரை நாடிச்சென்றான். அவனைக் காணாது தலைவி உள்ளப்போராட்ட நிலைக்கு உள்ளாகிறாள்.ஒருபரத்தையுடனன்றி பல பரத்தையருடன் தலைவன் தொடர்பு கொண்டிருந்தான். அந்நிலையில் அவள் துன்பம் பல பெறுகிறாள.; இந்நிலையில்கூட தலைவி பரத்தையரைச் சாடவில்லை(அகநா.236). தலைவியால் பரத்தை ~அருந்ததி |(அகநா.16) எனச் சிறப்பிக்கப்படுகிறாள்.பரத்தையைத் தலைவி இழித்துப்பேசவில்லை என்பது இதனால் புலனாகும்.பரத்தைக்கும் தலைவிக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு திருமணமேயாகும்.மகப்பேறடையும் உரிமையும் தலைவனது சொத்தினை முறைப்படி அனுபவிக்கும் உரிமையும் தலைவிக்கேயன்றிப் பரத்தைக்கு இல்லை என்பதற்கு சங்கப் பாடல்களில் சான்றுகள் உள.
 


தொகுப்புரை:
1. மகட்பேறு அடைந்த பின்னரே தலைவன் பரத்தமையொழுக்கத்தை மேற்கொண்டுள்ளான்.


2.மதுரையில் பரத்தையர் பெருகியிருந்தமையை அறியமுடிகிறது. அதற்குரிய காரணமாக மருதநில வளமும்,
அமைதியான வாழ்வும்,நாகரிகமும் அமைந்தன.

3.வையைக் கரையில் பொழிலாடும்பொழுதும், புனலாடும்பொழுதும்
தலைவனுடன் பரத்தையர் சென்றுள்ளனர்.இந்நிகழ்வு அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியும்.ஆனால், அச்சமூகம் அதனைக்குற்றமாகக் கருதவில்லை.

4.தலைவன் ஒரு பரத்தையுடனன்றி பல பரத்தையருடன் தொடர்பு
கொணடுள்ளான்.அவர்களைத் திருமணம் செய்துகொள்ளவில்லை.

5.பரத்தையிடம் சென்ற தலைவன் அங்கே தங்காது மறுநாளே
தலைவியை வந்தடைந்துள்ளான்.அவன் நீண்டநாள் அங்கேயே (பரத்தையர் இல்லம்) தங்கியதற்கானச் சான்றுகள் இல்லை.

6.பரத்தமை மேற்கொண்ட தலைவனைத் தலைவி சாடுகிறாளேயன்றி
பரத்தையரைச் சாடவில்லை.மாறாகப் பாராட்டுகிறாள்.

7.பரத்தையர்களுக்கு சமுதாய அங்கிகாரம் இருந்துள்ளது.

8.பரத்தையர்களுக்கென தனியிருப்பிடம் இருந்துள்ளது.

9.குடும்பத்தில் ஏற்பட்ட அமைதியின்மை,அன்பின்மை காரணமாக பரத்தமை நிகழ்ந்ததாக குறிப்புகள் இல்லை.

10.பரத்தமை காரணமாக விவாகரத்து நடந்தது என்பதற்கான குறிப்பும்,அதற்காகத் தலைவனை ஆள்கொண்டு அடித்தால் என்பதற்கான குறிப்பும்,தலைவி அதற்காகச் சினந்தெழுந்து
தன் தாய்வீடு சென்றாள் என்பதற்கான குறிப்பும் இல்லை.

11.பரத்தையர் பொருட்பெண்டிராக அச்சமூகத்தில் இல்லை.



துணைநூற் பட்டியல்:

1.Ellis,Havelock,psychology of sex

2.mayah Balase,the Indian female attitude towards
sex

3.அகநானூறு
 
 

முனைவர் இரா.குமார்
உதவிப்பேராசிரியர்
அழகப்பா அரசு கலைக் கல்லூரி
காரைக்குடி

முனைவர் இரா. குமார் அவர்களின் படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]