ஒப்பந்தம்
எங்கள் குடும்பத்தில் எனக்கும்
என் மனைவிக்கும் சண்டையே வருவதில்லை
எப்படி ?
எங்களுக்குள் ஒரு சின்ன ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டோம்
என்ன
ஒப்பந்தம் ?
அதுவா, சின்ன சின்ன விசையங்களையெல்லாம் என்
மனைவி பொறுப்பில் விட்டு விட்டேன்.
அவளுடைய முடிவே இறுதியானது
பெரிய விசயங்களெல்லாம் என் பொறுப்பு
அதில் என் முடிவுதான் இறுதி
அப்படியா, நன்றாக இருக்கிற்தே !
ஆமாம், இன்று என்ன சமையல் செய்வது,
பிள்ளையை எந்த ஸ்கூலில் சேர்ப்பது, எங்கே பிளாட் வாங்கலாம்,
எவ்வளவிற்கு வாங்கவேண்டும் விற்கவேண்டும்,
இப்படி சின்ன சின்ன உலக விசயங்களெல்லாம்
என் மனைவி பொறுப்பு
கடவுள் உண்டா இல்லையா ? சொர்க்கம் என்பது என்ன ?
அதை அடைய வழி, பிரார்த்தனையின் முக்கியம்,
இதுபோன்ற் பெரிய மெய்ஞான விசயங்களெல்லாம்
என் பொறுப்பில் வைத்துக்கொண்டுவிட்டேன்.
அன்புள்ள
கண்ணபிரான்.G
|