|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
வேதியியல் மாற்றங்கள் ...
1ஆம்
வகுப்பு படிக்கையில்
மகாமக தொடர்வண்டியில்
நிறுத்தம் வரும் முன்பு குதித்து
கற்களில் விழுந்து சக்கரத்தில் சிக்கும் முன்
கைபற்றி எனை இழுத்த அர்விந்து அண்ணா
5ஆம் வகுப்பில்
ஹாஸ்டலில் இருக்கும் என்னை
வாரம் தோறும் வெள்ளி அன்று
வீட்டிற்கு அழைத்து செல்லும்
அஜி காக்கா(அண்ணன்)
இந்திரா காந்தி சுடப்பட்டு
போக்குவரத்துகள் தடைப்பட்டு
10கீ.மீ இருக்கும் என் வீட்டிற்கு நடக்கத் துவங்கியது
அறியாமல் பள்ளியில் எனைத்தேடிய
பக்கத்துவீட்டு தாஸ் அண்ணா
தோல்வியில் துவண்டுவிட்ட என்னை
தூக்கி நிறுத்திய
எனது தோழன் ரமேஷ்
அக்கவுண்ட்ஸ் பாடத்தை
அழகாய் சொல்லி கொடுத்த
ஸ்ரீநிவாசன் சார்
நட்புடன் கணக்கும் கணினியும்
பயிற்றுவித்த
விஜய் காந்தன் சார்
'அம்மா' என்று மீண்டும் அழைக்க வைத்த
எனது இரண்டாம் தாய் ரேவதி டீச்சர்
பாடலின் இசைக்கு
மனம் மட்டுமல்ல
என் கால்களையும் நடனமாடச் செய்த
என் மானசீக குரு
சிராஜ் அண்ணா
இன்னும் இன்னும்
இப்படியாக நான் அறிந்த பெயர்களும்
அனுபவித்த நிகழ்வுகளும்
ஏற்படுத்திய உணர்வுகளை
சற்றே தள்ளிவைத்து
நொடிக்கும் குறைவான
நமது கண்களின் உரசலில்
எனக்குள்ளே மீண்டும்
இரசாயன மடை உடைத்து
வேதியியல் மாற்றங்கள் நிகழ்த்துகின்றன
உன் நினைவுகள்
இதன் பெயரும்
'காதலோ'
நட்புடன்
ஜமால்
|
ஜமால்
-ன் இதர
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|