|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
உன் கல்லறையில் பூத்த
புற்கள்
வானம் மிக நீண்ட
தெருக்களாய் -
அகன்று விரிந்திருக்க;
அங்கே -
உன்னொரு சிறு
பார்வைக்காய் காத்திருக்கிறது மனசு,
எல்லோரும்; பாரவனை -
கிறுக்கன் என்கிறார்கள்;
தொலைத்த இடத்தில் -
மரணத்திற்குப் பின்னிருந்து
உன்னை தேடுகிறேனென்று யாரரிவார்;
கண்ணீரில் நனைந்த
கல்லறையில் - உன்னை
பிரிந்த சோகமே புற்களாய் பூத்திருக்க
எனக்குள் இறவாத உன்
உயிர் கொண்டு தானே மெல்ல மெல்ல
உயிர் துறக்கிறேன்;
சுற்றி திரிந்த தெருக்களும்
அமர்ந்து பேசிய கோவிலும்
நின்று பார்த்த குழாயடியும்
முத்தம் தந்த -
ஜன்னலின் அருகாமையும் போக
வேறென்ன வேண்டுமெனை கொல்வதற்க்கென -
யாருக்குமே புரியாது தான்;
யாருக்குமே புரியாது தான்!
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|