|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
................................................................................................................
tamilparks
@
gmail.com
................................................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
எம் வீர காவியம் நின்னு கேளுடா; ஈழம்
எம் வீர காவியம் நின்னு கேளுடா ஈழமுன்னா வெறும் மண்ணு இல்லைடா.. புலி கொடி பறந்து ஆண்ட தேசம்டா உலகை; இன்றும் தாங்கும் ஒற்றை இனமடா! எம் வீர காவியம்... பெண்ணை தாயென பார்த்த பூமி தானடா வந்தவரெல்லாம் வாழ்ந்த மண்ணுடா; பொண்ணும் பொருளும் நிறைந்த சொர்கம்டா போட்டதை எல்லாம் விளைத்த வர்கம்டா..! எம் வீர காவியம்... காலம் ஏனோ மாறி போச்சிடா கயவர்களாலே ஆடி போச்சிடா; குழந்தையும் குடும்பமும் மாண்ட சோகம்டா கொலைவெறி தரித்து நடந்த துரோகம்டா! எம் வீர காவியம்... அறுபது வருடம் எரியும் நெருப்புடா அநீதி அழிந்திட பூண்ட போருடா; இரண்டில் ஒன்றே பார்க்கும் வீரம்டா எதிர்க்கும் காலம் தூரமில்லடா! எம் வீர காவியம்... குண்டுகளெல்லாம் உமிழும் எச்சில்டா உயிரே கூட துச்சமில்லடா; ஈழம் ஒன்றே கனவு கனவுடா.. விடுதலை ஒன்றே எல்லை கொடுடா! எம் வீர காவியம்... காலம் என்ன - களையா பறிக்கு(ன்)டா???????? காலம் என்ன - எமை ஈழம் வெல்ல - எதிர்த்தா நிற்கும்டா?? ஓரங் கட்டி நின்ற கணக்கெலாம் வீரம் பூட்டி வெல்வதுறுதிடா; யாம் சேர்ந்தால் ஞாலம் சுருண்டு போகும்டா - தமிழன் மூச்சின் வெப்பம் ஈழம் வெல்லும்டா!! எம் வீர காவியம்... யாமும் ஓர்தினம் ஆளுவோமடா - தமிழன் - ஆண்ட பெருமையை பாடுவோமடா; உரக்கக் கத்தி கூறுவோமடா ஈழ விடுதலை வெல்லவே சுவாசிப்போமடா! வெற்றி என்பது வெறும் - பேச்சி இல்லடா புலிக்கொடி பறக்கும் சாட்சி நாளடா; இதை நெஞ்சிலேற்றி நித்தம் வாழடா விடுதலை வெல்ல உறுதி கொள்ளடா!! உறுதி கொள்ளடா!!!
(குறிப்பு:- இதை யாரவது பாட்டா பட மெட்டு அமைப்பீங்களா; நன்றாக இருக்குமா? முடிந்தால் உதவுங்கள். நன்றி!!)
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|