Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 March 03, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

................................................................................................................

tamilparks

@

gmail.com

................................................................................................................

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

காற்றில் கலந்த ஈழப் புரட்சி

 

 


நீ சிரித்துப் பாடிய பாட்டெங்கே
உன் சிரித்த முகமெங்கே
நீ வளர்த்த வீரமிங்கே -
கண்ணீர் விட்டழுகிறதே;

உன் கருணை முகமெங்கே
காற்றில் தீராத உன் பாடல் - தொலைந்துப் போனதெங்கே
விடியாத ஈழ இருட்டில் மேலும் -
நீ பிரிந்த சேதி வலிக்கிறதே;

பெற்ற - தாய் காட்டுமுன் பாசமெங்கே
கொதித்தெழுமுன் கோப துடிப்பெங்கே
உயிர் மூச்சடிங்கி நீ போன தூரமாய் -
நெஞ்சம் கனக்கிறதே; கனக்கிறதே;

எந் தலைவனுக்குத் தந்த தோளெங்கே
போர் கணைகள் படைக்கும் திறமெங்கே
நீ பாடி வளர்த்த புரட்சியின் -
மீதி நினைவுகள் மிஞ்சி எரிக்கிறதே;

எம்; இந்திய முதல் பாசறை ஆண்ட துணிவெங்கே
உன் வெடிமருந்து புலமை போனதெங்கே
ஆயுதம் படைத்து நீ விட்ட ஆயுள்
இருபது - வருடம் கடந்தும் சுடுகிறதே; சுடுகிறதே;

உனை தேடிப் பார்த்த இடமெல்லாம்
நீ இறந்த தடமே கிடைக்கலையே -
நீ காற்றாய் கலந்த உண்மை மட்டும்
வெடித்த - சப்தம் கூறி அடங்கியதே;

காலம் கூறும் கதைகளையெல்லாம்
வரலாறு எழுதிக் கொள்ளும்; கொள்ளட்டுமே
ஈழதேசம் உள்ளவரை - பொன்னம்மான்
இருப்பதாகவே உள்ளம் நம்பும்; நம்பட்டுமே! நம்பட்டுமே!!


 

நன்றி

 

வித்யாசாகர்

வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]