|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
ஈழம் வெல்லும்
வெற்று முழக்கமல்ல - இது
உயர் ஈழத்தின்
வெற்றி முழக்கம்!
வெற்று வேஷமல்ல - இது
உயிர் ஈழத்தின்
வெற்றி கோஷம்!
ஈழம் கொல்லும்
பேயகத்தை
ஈழம் வெல்லும்
தாயத்தை
இழந்தோம் இறந்தோம்
மாண்டோம் மறைந்தோம்- இது
எங்களுக்கு மூடத்தனம்
விழுந்தோம் எழுந்தோம்
விரைந்தோம் தொடர்ந்தோம்- இது
எங்களின் மூலதனம்.
இவ்வுண்மை துறந்து
ஈழக்கவசம் அணிந்து
நீலிக்கண்ணீர் வடிப்போரே!
எம்தன்மை மறந்து
பொய்தன்மை கொணர்ந்து
கானால் நீராய் வடிவெடுப்போரே!
கோஞ்சம் கேளுங்கள்
தஞ்சம் தாருங்கள்
இல்லை இல்லை- எம்
தஞ்சம் வாருங்கள்
உங்கள் இடத்தில் அல்ல
எங்கள் உள்ளத்தில
உங்கள் பேச்சில் அல்ல
எங்கள் மூச்சில்.
புரியும் அப்பொழுது!
ஈழம் வெற்றிடம் அல்ல – புவி
ஆளும் வெற்றி இடம்.
தெரியும் அப்பொழுது
இனம் வேற்றினம் அல்ல- ப+ர்வீக
இனம் தமிழ் இனம்
தன் கொக்கரிப்பில் சூரியன் உதிக்கிறது
நினைத்துக் கொள்கிறது சேவல்.
பாவம்! அந்த ஐந்தறிவு ஜந்து
தம் படையால் ஈழம் வீழும்
முனை;ந்து செல்கிறது சிங்களம்.
பாவம் இந்த ஆறறிவு ஜந்து.
உண்மைகள் புரியவில்லை
விளைவுகள் தெரியவில்லை
வருத்தப்படுகிறோம்
உங்கள் அறியாமை நினைத்து!
வருத்தப்படுகிறோம்
எங்கள் தளராமை முனைப்பை!
புலி பதுங்குகிறது பயத்தாலா?
இல்லை இல்லை
பாய்வதற்கே!
புலி தாக்குகிறது பதுக்குவதற்கா?
இல்லை இல்லை
பகிற்வதற்கே!
புலி அழிக்கிறது வெறியாலா?
இல்லை இல்லை
உரிமைக்காகவே!
மழை வந்திடும்
மனம் குளிர்ந்திடும்
மேனிகள் நனைந்திட
மேகங்கள் இணைந்திட்டால்!
ஈழம் வென்றிடும்
வெற்றிகள் தொடர்ந்திடும்
தாக்கங்கள் கொணர்ந்திட
வேகங்கள் தொடர்ந்திட்டால்!
கரு தாங்கிய கருவறைகள்- இன்றும்
நலிந்து விடவில்லை
பாலூட்டிய கொங்கைகள்- என்றும்
தளர்ந்து போவதில்லை.
இதனாலே பணயம் வைக்கிறோம்
இன்றும் உயிர்தனை- வெற்றி
பயணம் செல்வது நினைத்து!
அதனாலே அவயம் கொடுக்கிறோம்
என்றும் எதிருக்கு – சுற்றி
பாடை கட்டுவோம் அவனுக்கு!
கொட்டு முரசே தமிழா கொட்டு முரசே!
சிங்களன் வீழ்ந்தான்
ஈழன் எழுந்தான்
கொட்டு முரசே தமிழா கொட்டு!
ம. டைட்டஸ்
மோகன்
|
ம. டைட்டஸ் மோகன்
-ன் இதர
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|