நண்பனுக்கு நான் ...
உன் கண்ணீரை
சுமக்க,
தாங்கும் பூமியாக,
உன்னோடு,
நான் இருப்பேன்,
உன் மகிழ்ச்சியின் சிரிப்பு வெள்ளத்தில்,
ஓலிக்கும் சத்தமாக,
உன்னோடு நான் இருப்பேன்,
சுற்றம் உன்னை துறந்தாலும்,
என்றும் உற்ற நண்பனாக.
உன்னோடு நான் இருப்பேன் ...
நீ வாழ்க்கை பள்ளத்தில் விழுந்தால்,
கை கொடுக்கும் ஏணியாக,
உன்னோடு நான் இருப்பேன் ..
இந்த நொடியில் நீ எங்கு இருந்தாலும்,
ஒரு கணம் உன்னை நினைக்கும்,
உன் பெற்றோரோடு,
ஒருவனாக
நானும் இருப்பேன்
நன்றி
ஆ.முத்துவேல் |