|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
புறப்படு பெண்ணே; போர் கொள்
ஆடிக் காற்றிலே
அம்மா கும்மியடி
ஆயிரம் பேரையும் சொல்லி அடி!
சட்டமும் பட்டமும் செய்து முடி
இனி பெண்ணென்றால் யாரென்று காட்டுங்கடி!
அடுப்பு மூலையில் சோறை ஆக்கிக்கடி
அதை நிலாவிலே கொண்டு போய் தின்னுக்கடி!
அச்சமும் நாணமும் தூர எறி - பெண்ணே
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதை ஒன்றாக்கடி!
ஆட்டமும் பாட்டமும் போதுமடி - இனி
ஆளுக்கொரு வானத்தை வெல்லுங்கடி!
சேலை தலைப்பிலே ஏன் கண்ணீரடி
இனி சுப்பனோ குப்பனோ துரத்தி யடி!
அடங்கி அடங்கிப் போக கூடாதடி - பெண்ணே
ஆணவம் கண்டினி ஓடாதேடி!
ஆணுக்கு பெண்ணிங்கே நிகரில்லடி - பெண்ணே
ஆணொன்றும் பெண்ணுக்கு இலக்கில்லடி!
ஆணும் தானும் ஒரு கை கோர்த்தடி -
ஆணும் தானும் ஒரு கை கோர்த்தடி - பெண்ணே
அகிலத்தை மொத்தமாய் ஆண்டுக்கடி!
வானம் வரை ஒரு போர் கொள்ளடி - பெண்ணே
ஈழம் வெல்ல எவன் கொம்பனடி!
வீடு உறவெல்லாம் வேணுமடி - பெண்ணே
சிங்களன் தொட்டாலே சீறி-அடி!
ஆடிக் காற்றிலே பெண்ணே கும்மியடி
இனி சிங்களன் சிங்கமோ; தூசியடி!
புலி விரட்டிய பெண்ணே புறப்படடி
சூரியனை கூட நீ சுட்டு எறி!
வானம் வரை ஒரு போர் கொள்ளடி - பெண்ணே
வானம் வரை ஒரு போர் கொள்ளடி -
வெல்லும் வரை பெண்ணே ஓயாதேடி!
ஈழ ஈழ ரத்தம் பாயுதடி - பெண்ணே
ஈழ ஈழ ரத்தம் பாயுதடி -
நீயும் பொங்கியெழுந்தா ஈழம் கையிலடி!
ஆணென்றும் பெண்ணென்றும் பார்காதடி
பெண்ணே -ஆணென்றும் பெண்ணென்றும் பார்காதடி
ஈழம் வெல்லும்வரை ஓயாதடி!!
புறப்படு புறப்படு போர் கொள்ளடி - பெண்ணே
புறப்படு புறப்படு போர் கொள்ளடி - பெண்ணே
நீ சுழற்றிய வாளுக்கெல்லாம் நீதி ஈழமடி!
வீரம் வீரம் பொங்க சமர் செய்யடி -
வீரம் வீரம் பொங்க சமர் செய்யடி -
சமரிலே பெண்மையின் சவால் வெல்லடி!!
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|