'ஹைக்கூ' போல..../ குறும்பாய்க் குறும்பா
இறந்தகாலத்தில் நிகழ்காலம்
புதைபொருள் ஆராய்ச்சி
முதுமக்கள் தாழி : உள்ளே
சிதைந்த சிம்கார்டு
.................................................................................................................
நியாயவிலைக் கடை
ஏழை துயர் துடைக்கும் அரசாங்கக்கடை
இருப்பில் இருக்கும் எப்போதும்
இருப்பு இல்லை என்ற பதில்
.................................................................................................................
உயிரா?உயிலா?
உயிர் துறந்தவரை அனுப்பிவிட்டு
உயில் திறக்கும் ஆர்வத்தில்
அவசரமாய் வாரிசுகள்
.................................................................................................................
மறக்காமல்..
குடை மறந்த நாளில்
மறக்காமல் வந்தது :
மழை
.................................................................................................................
பேராசை
அறுசுவையில் சோறு
ஆங்கிலத்தில் பேரு :பிறக்க
ஏங்குகிறாள் மாடிவீட்டில் நாயாக
.................................................................................................................
உண்மை
சமையல்காரர் ருசிபார்த்தபின்
மிச்சத்தில் பசியாறுகிறார்:
முதலாளி
.................................................................................................................
நன்றி
துரை, தூத்துக்குடி
|