நான் என்ன செய்வேன்
மேஜைக்கு மேலே
வேலை செய்ய,
மேஜைக்கு கீழே விலை,
அரசு உழியன் ...
ஜாதி வேற்றுமை அற்ற,
நிற வெறி அல்லாத,
பணக்காரன் ஏழை பாகுபாடு பார்க்காத,
எல்லா மதத்தினரும் சமமாக,
நம் நாடு,
லஞ்சம் வாங்கும்போது ............
சுழற்சி முறை,
நான் வாங்குவது, இன்னொருவனுக்கு கொடுக்கத்தான்,
வேறு வழியில்,
அரசு உழியன் ...
அரசு உழிய நண்பா,
நான் என்ன சுரண்டல் லாட்ரியா?,
இப்படி சுரண்டி பிழிகிறாய்,
பொது மக்கள் ...
வியர்வை துடைக்க பயன்பட்ட உன் கைக்குட்டைகள்,
இன்று உன் முகத்தை மறைக்க பயன்படுகிறதே.
லஞ்சத்தில் அகப்படும்போது ............
நன்றி
இராஜ.தியாகராஜன் |