|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
.............................................................................................
tamilparks
@
gmail.com
.............................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
ஹைக்கூக்கள்
உன்னிடம் பேசிடாத
வார்த்தைகளை
கோர்த்துவைக்கிறேன்
வெறும் கடிதமென
கிழித்துவிடாதே!
---------------------------------------
நீ சற்று தள்ளி நின்று
விடை பெறுவதாக சொன்னாய்
இதயம் உனக்கு முன்னே ஓடி
உன் -
பார்வைக்குள்ளேயே சிக்கிக் கொண்டது பார்....
---------------------------------------
நீ என்னிடம் பேச துடிக்கும்
உன் மனசை
உன் பார்வையால் -
மறைக்க முடிய வில்லை தான்!
---------------------------------------
உன்னிடம் கேட்காமல் தான்
பார்வையிலுன் இதயம் தொட்டேன்
நான் தோட்ட -
உன் இதயமெலாம்
இனி காதலாய் பூக்காதா!!
---------------------------------------
என் இதய தெருவில்
உன் நினைவின் பூக்களாய்
தூவி இருக்கிறேன்
உன் பூம்பாதம் - நோகிடாதோ - யென
பூக்களை வேண்டுமெனில்
விட்டுவிடு;
இதயத்தை தொட்டு விடவாவது
ஒருமுறை வந்து போ..!
---------------------------------------
யாருமே -
தொட்டிடாத இடம்
லேசாகத் தான்
தட்டினாய் - உன் பார்வையில்
படக்கென திறந்ததென் இதயம்!
---------------------------------------
காதலுக்கு எந்த
இலக்கணமும் நான்
கற்கவில்லையடி -
உன்னை பார்த்ததை தவிர!
---------------------------------------
சொட்டு சொட்டாகத் தான்
சொட்டுகிறதென் கண்ணீர்
அது உயிருமென -
உனக்கு புரிந்திருந்தால்
நீயும் காதலித்திருப்பாயே!
---------------------------------------
அதோ உனக்காக
நான் சேர்த்து வைத்த
கனவுகளையெல்லாம் -
உன் சிரிப்பினை தொட்டுப் பறக்கும்
பட்டாம் பூச்சியோடு பறக்க விட்டுவிட்டேன்;
மீண்டும் நீ -
என்னை பார்த்து சிரிக்காமலா
போவாய்;
சிரித்தால் ஒரு பட்டாம் பூச்சியை
இனமாகத் தருகிறேன்,
அதை பிடித்து உன் இதயத்தில்
பறக்கவிடு -
அது பறக்கையில் உதிரும்
வண்ணங்களில்..
என் கனவுகள் மீண்டும் உனக்காய் பூ பூக்கும்!
----------------------------------------
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|