திருவிழாக்களும்
தேர்வுலாக்களும்
எனக்கு வசந்தகாலம்
சில்லறை அதிகம் சேர்வதால்
தெரு நாய்களும்
கொசுக்களும்
என் பங்காளிகள்
இரவில் எனக்கு துணையாக
நெருசலான சாலைகளும்
நெருடலான காலைகளும்
என் ரசிகர்கள்
அங்கெல்லாம் நான் காட்சிப்பொருளே
வியற்ற நெத்தியும்
வெந்த வயிறும்
என் உடன் பிறப்புக்கள்
வறுமையிலும் உடனிருப்பவை
மழை கதிரும்
வெயில் சாரலும்
என் குற்றாலம்
இலவசமா கிட்டுபவை
ஹோட்டல் கழிவும்
டீக்கடையின் கனிவும்
எனக்கு அறுசுவையே
அடிக்கடி பசியாத்துபவை
தந்திர மானுடமும்
எந்திர வாழ்க்கையும்
நான் பாவப்படுபவை
நிம்மதியை எங்கோ தேடுவதால்