Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 May 22, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

................................................................................................................

tamilparks

@

gmail.com

................................................................................................................

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

கல்லறைகளின் மீதாவது உறங்கி விழித்திருப்போம்!

 

 

எம் சுவாச மூச்செலாம் 
வெடிகுண்டு நெடியில்
விசமேறிப்  போயிருந்தும் -
விடுதலைக்கென்றே உயிர்சுமந்துத் திரிகிறோம்:
 
தெருக்கள் நெடுகிலும் உலாவந்த
எம் சின்னஞ்சிறு குழந்தைகளெல்லாம்
வீழ்ந்த குண்டுகளில் சிதைந்துப் போனாலும்
தெருவின் கடைகோடி வீட்டின் -
ஒற்றை உயிருக்காய் விடுதலை கோரி நிற்கிறோம்;
 
பசுமை குன்றியிரா எம் தேச
நிலங்களிலெல்லாம் -
கன்னி வெடிகளே புதைந்திருந்தாலும் 
எடுத்து வீசிவிட்டு மீண்டும் -
உயிர் நடவு செய்யக் காத்திருக்கிறோம்;
 
'அழகிய தமிழ்'  விளைந்து செழித்த - ஈழம்
குண்டுகளை விழுங்கி -
வெடி சப்தத்தில் திணறி -
தமிழர் பலர் உயிரை குடித்து சிவந்து கிடப்பினும்
மீண்டும் தமிழரையே அங்கு விளைவிக்குமெனும்
நியதியை நம்புகிறோம்;
 
கண்ணிலிருந்து அகன்றிடாத
உறவுகளின் அழுகையும் கதறலும்
மெல்ல மெல்ல எமை கொன்று போட்டாலும்
ஓர் நாள் - பறக்கவிருக்கும் புலிக் கொடியின்
ஜாலம் பார்க்க -
 
விடுதலை விடுதலை எனும் கோசம் எழுப்பி
ஈழ தேசம் முழுதும் நிறைக்க -
 
வென்றதன் கண்ணீரில் வீழ்ந்தோரின்
தாகம் தணிக்க -
 
வாழ்வின் வருடங்கள் அத்தனையையும்
எமக்காய் அர்பணித்த எம் தலைவனின்
முகமலர்ச்சியை கண்டு -
வாழ்க தமிழ்; வெல்க ஈழம்; வளர்க எம் தேசமென
ஓங்கும் குரலொலியில் -
சொட்டிய ரத்தங்கலெல்லாம்  மீண்டும்
தமிழாய் தமிழாய் பிறக்க -
 
உலகின் ஏதேனும் ஒரு மூலையில்
எங்கேனும் ஒரு குடிலில்
குடிலற்றுப் போயினும் -
இறந்த எம் வீரர்களின்
கல்லறை மீதாவது உறங்கி விழித்து
உயிர் பெற்றிருப்போம் வாருங்கள் உறவுகளே!


 

நன்றி

 

வித்யாசாகர்

வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]