|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
கவியரசு கண்ணதாசன் ஹைக்கூ
சங்க இலக்கியத்தை
சாமானியருக்கு சமர்ப்பித்தவர்
கவியரசு
திருக்குறளின் நுட்பத்தை
திரைப்பாடலில் வடித்தவர்
கவியரசு
நிரந்தரமானவன் அழிவில்லை
நிதர்சனமான உண்மை
கவியரசு
பணத்தை மதிக்காதவர்
குணத்தை மதித்தவர்
கவியரசு
தித்திக்கும் பாடல்களை
திகட்டாமல் தந்தவர்
கவியரசு
நடிகர் திலகம் புரட்சித்தலைவர்
சிகரம் அடைய காரணமானவர்
கவியரசு
காலத்தால் அழியாத
கல்வெட்டுக்கவிதை புனைந்தவர்
கவியரசு
கொடிகட்டி பறந்த போதும்
செருக்கு இல்லாத எளியவர்
கவியரசு
ரகசியம் இல்லாத
அதிசயக்கவி
கவியரசு
முற்றிலும் பொருத்தமானவர்
பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்
கவியரசு
கள்ளம் கபடமற்றவர்
குழந்தை உள்ளம் படைத்தவர்
கவியரசு
கண்ணே கலைமானே
கடைசியாகப்பாடியவர்
கவியரசு
.........................................................................................
நன்றி
கவிஞர் இரா. இரவி, மதுரை |
கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|