New World Jokes Quotes Computer Tips & Tricks
பொன்மொழி
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தொடர்புக்கு
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்
01-03-2006
புதிப்பிக்கப்பட்ட நாள்
December 09, 2009
உங்கள் பார்வை எண்
இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்
ஒரு தாயின் குமுறல்
(கும்பகோணம் தீ விபத்தின் போது
எழுதிய கவிதை)
மகனே! கல்வி கற்று வந்திடுவாய்... கனவுடனே காத்திருக்க, நீ கானலாய் ஆனதென்ன! அதிகாலையில் சோறூட்டி கைகழுவி விட்டேனே, பதிலுக்கு விட்டாயோ நீயும் கைகழுவி! ஒரு கீறல் உன்னுடம்பில் ஒத்திடாத நான், உனை பெரும் உலைதனிலே விட்டதென்ன! கண்ணே! என்றழைத்தால் கல்விதான் கண்ணம்மா கற்று வருவேன் பெரியவனாய்... நின் கொஞ்சும் மழலை பேச்செங்கே?! கன்னக்குழி அழகு பார்த்து கண்பட்டு போயிடுமே! கரிதடவி விடுவேனய்யா... யார் கண் பட்டதுவோ நீ பட்டு போனாயே! கால் பட்ட தீ தழும்பில் களிம்பு தடவி விட்ட நான், உடல் பட்ட தீயதற்கு ஒரு மருந்தும் தடவேனோ?! கோபத்தில் அடிபட்டு கொல்லைப்புறம் ஒளிந்திருக்க, கொஞ்சி அணைத்திட வரும்போது குதித்து ஓடும் அழகெங்கே? அந்தி சாயும் வேளையிலே... நீ வரும் வழி நோக்கி விழி வைத்து வலியோடிருப்பேனே... இன்று வலிவிட்டு போனதடா! வந்ததும் வராததுமாய் கொடுத்து விட்ட அன்னமதை குறைவையாமல் தின்றாயா? கடிந்தே கேட்பேனே... கோபமாடா என்னோடு? இரவு... படிக்கும் வேளைப் பொழுதினிலே, இன்று படித்து கொடுத்ததென்ன? கேட்டால் அணிலே அணிலே ஓடிவா... என்றுரைப்பாயே எங்கேடா அம்மொழியும்?! என்னுடனே கண்ணயர இறுகபற்றும் கைகள் எங்கே? என் மாரோடு அணைத்து வைக்கும் மகனே உன் முகம்தான் எங்கே? ஆலதுவாய் நானிருக்க, விழுதெனவே நீயிருந்து அடிபெயரா காத்திடுவாய்... கண்டு வைத்த கனவதுவோ ஊமைக்கனவு ஆனதடா? அலட்சிய போக்கே இலட்சியமாம் நிர்வாக(ண)மே! ஒழுங்காய் இருந்திடு உந்தன் செயலில். கன்றுபோல இரண்டிருந்தும் என் கை நடக்க இன்றில்லை. இனியும் வேண்டாம் எதிலுமே, இச்செய்கை இந்நாட்டில். கட்டளை இட்டுரைக்கிறேன் என் மகன் மீது சத்தியமாய். பா. பார்த்தசாரதி நாகர்கோவில்
பா. பார்த்தசாரதி நாகர்கோவில்
பா. பார்த்தசாரதி - ன் இதர படைப்புகள்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும். நன்றி.
[Fun World] [About India] [New World]
[Mobile Park] [Collections4U] [more]