|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
.............................................................................................
tamilparks
@
gmail.com
.............................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
குறுங்கவிதைகள்
வானம் தொடாத
சிறகொன்று -
காற்றில் அலைந்து அலைந்து திரிந்ததில்
வெளியில் தெரியாத -
நிறைய முகங்கள்
வந்து வந்து களைகின்றன!
-------------------------------------------------------
எங்கோ ஒரு
சாவு மேளத்தின் சப்தம்
தொலைவிலிருந்து -
கேட்டுக் கொண்டு தானிருக்கிறது
நிறைய அழுகுரல்களையும்
மரணத்தின் வாசத்தையும்
விழுங்கிவிட்டு!
-------------------------------------------------------
என் -
கழுத்திலிருக்கும்
தங்க சங்கிலியும்
கைவிரல் மோதிரமும் காப்பும்
எத்தனையோ ஏழை பெண்களுக்கு
கிடைக்காத தாலியை -
நினைவுபடுத்தாமலில்லை!
-------------------------------------------------------
நிறைய வீடுகளில்
மின்விளக்கும்
மின்விசிறியும்
வெட்டியாய் எரிந்துக் கொண்டும்
இயங்கிக் கொண்டும் தானிருக்கிறது
வேறுசில வீட்டின் -
வெளிச்சத்தைத் திருடிக்கொண்டு!
-------------------------------------------------------
சரியில்லை எனத் தெரிந்தும்
அறுத்தெறிய மறுக்கிறது
பல மடமைகளை -
என் மூதாதையர் வளர்த்த
புத்தி!
-------------------------------------------------------
காசு கொடுத்து
வாங்க இயலாத
பொருள்களிலிருந்து தான்
பூக்கிறது கனவு -
வாங்கிய பொருள்களின் ஆசை தீர்ந்த
சலிப்பிற்கிடையேயும்!
-------------------------------------------------------
இன்னும் -
நிறைய மண்
மாளிகையாகாமலும்,
நிறைய துணிகள்
நெய்யப் படாமலும்,
மனிதர்கள் -
நிறையப் பேர்
பக்குவப் படாமலும் தான்
சுற்றுகிறது பூமி!
-------------------------------------------------------
கால நேர
சம்பிரதாயம் பார்பவர்கள்
வீட்டிலும் -
பிணங்கள் விழாமலில்லை!
-------------------------------------------------------
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|