|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
மடை
ஈழமொன்றை
ஈன்றெடுக்க
சாதி சமயம் விட்டு
குலம் கோத்திரம் தவறி
பிராமணர்கள் கூட
மச்சம் சமைக்க முயன்றார்கள்
தம்பியருடன்.
நல்லது தான் என
நால்வரும் கூறினர்
பின் கூடினர்-ஆனாலும்
காணவில்லையே உப்பை.
தேடினார்கள்
மக்களின் மனதிற்குள்
தமிழரின் கண்களுக்குள்
கன்னமோ கண்ணீரில் காய்ந்து
உப்பளமாகிக் கிடந்தது.
உப்புச்சப்பு இல்லாமல்.
காலப்போக்கில்
கண்களின் உப்புக்கள்.
நந்திக்கடலிலும் கொட்டிக்கிடந்தது.
பொங்குதமிழாகப் பொங்கிப் போட்டார்கள்
மடைவைத்துக் கிடந்தன
தமிழ்பிணங்கள் தாராளமாக
சாப்பிடத்தான் சனமில்லை.
தின்பதற்கு சிங்கத்தைத்தவிர
அங்கு விலங்குகளே இல்லை.
தெருத்தெருவாய்
தொழுதுபார்த்தொழுது பார்த்தோம்
அகிலமெங்கும் அழுதுபார்த்தோம்.
உலகம் உருள்வதாய் தெரியவில்லை
தொட்டைக்குள் தொலைந்து
தொங்கி கிடந்தது உலகம்.
உண்ணவும் முடியவில்லை
உமிழவும் முடியவில்லை
இனி சிங்கத்தை சிதறடிக்க
எங்கெங்கு எத்தனை
மிருகங்கள் உருவாகப்போகிறதோ?
புத்தி ஜீவிகளின்
புத்திகள் சீவப்பட்டதால்
புத்துள் ஜீவிகளாய்
புத்திரர் மாறினரே- இனி
புத்திஜீவிகள் எப்போ
சீவிய புத்தியுடன்
சிங்கத்தின் முன்னால் சீறுவர்?
சிங்கம் காட்டு இராசாதான்
நாட்டு இராசா ஆகுமா?
நாடு கட்டும் இராசா ஆகுமா?
பொறுத்திருந்துதான் பார்ப்போமே
வன்னி அகதிகள் சிறைக்குள்
செத்து மடியும் வரையா?
தமிழன் எனும் சுவடு
தொலையும் வரையா?
சிந்தித்துக் கொண்டே இருப்போம்
புத்தி சீவி முடியும் வரை
பின் எழுதுவதற்கு பென்னில் இருக்காது.
தென்னிந்தியப் படங்கள் பார்த்து
படநடிகர் எம்ஜிஆர் போன்றோருடன் கூடி
படம்காட்டிக் காட்டியே
பட்டுப்போனது பாழ்பட்ட சமூகம்.
நம்பி நம்பியே
நடுக்கடலில் நந்தி செத்துக்கிடந்ததோ?
நந்தி சிவனைப் பார்க்க
நகர்ந்து எப்போ வழிவிட்டது.
நாண்டு நட்டுக்கிடந்ததால்
நடுக்கடலில் நாசமானதோ?
சமைக்கவும் முடியவில்லை
சமைத்ததைத் சாப்பிடவும் முடியவில்லை.
இப்படிச் சமைந்தது
தமிழனின் தலைவிதி
ஒரினத்தை
ஒரு தனிமனிதனாக்கியதன்
விளைவு இதுதான்
தொலைவுதான் அது.
நாம் சமைத்தோமா?
சமைந்தோமா?
நன்றி
நோர்வே நக்கீரா |
நோர்வே நக்கீரா
அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|