மனிதா...
மனிதா உந்தன் பிறப்பின் அர்த்தம்
அறியும் முன்னே மரிப்பாயோ
மண்ணில் உந்தன் பாதடி வைத்தாய்
வாழும் நாளை அறிவாயோ
இந்த பிறவி எடுத்ததேன்
அதை நீயும் தேடடா
கண்டு கொண்ட பின்
அந்த கடவுள் நீயடா
கருவறை கறுப்பாய் இருந்தாய் தோழா
உருவுறை உடலில் மறையாதே
பனி மலை காற்றா நீயும் இல்லை
புவின் மடியில் உறங்காதே
கயவனும் காமனும் வாழும் உலகில்
கண்மணி விழிகள் கலங்குதடா
கதறும் தாயின் கண்ணீர் துடைக்க
தமிழனே உன் விரல் போதுமடா
உன் கரத்தின் வலுவினில்
பல உள்ளம் மகிளட்டும்
உன் அறத்தின் வலிமையில்
பல உயிர்கள் வாளட்டும்
பணந்தனை சேர்த்து வாழும் மடையா
பசியின் கொடுமை அறியாயோ
பசியில் மனிதன் மாளும் உலகில்
மண்ணில் காசை புதைத்தாயோ
அளகும் அறிவும் தேடும் மனிதா
உணர்வின் உருவம் கண்டாயோ
தாயின் விழியிலும் ஏழை வயிற்றிலும்
உயிரின் உருவம் தெரியுமடா
உன் உளைப்பில் வாழ்ந்து பார்
உன் உள்ளம மகிளுமே
ஏளை உறவை தேடி பார்
அந்த தெய்வம் உனை நாடுமே
தர்ஷிகா
|