|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
மின்னலே...
ஏனடி எனை கொன்று போகிறாய்
என் கண்ணிலே நிதம் உப்பை காய்ச்சிகிறாய்
என் காதலை நீ ஏற்பதென்ன தீவிரவாதமோ...
சில பார்வைகள் நீ தந்து போனதும்
என் வார்த்தைகள் உடன் நின்று போனது
உன் கண்ணிலே என் காதல் பூக்கவே
என் கண்களே தினம் நீரை வார்க்குதே
என் காதல் இன்று வரண்டு போன மேகமானதே...
பால் குடிக்க காத்திருக்கும் அன்னை போலவே,
என் காதலையே நீ சுவைக்க காத்திருக்கிறேன்.
வானம் பார்க்க காத்திருக்கும் உழவன் போலவே,
உன் பார்வை பட காத்திருக்கும், ஏழை பக்தனே,
எப்போதும் நான் உனையே எண்ணி தேய்கிறேன்...
நீ இப்போதும் தான் மறைந்தே மறுப்பு சொல்கிறாய்.
வண்ண வண்ணமாய் அணிந்த உன் வளையல் ஓசையே
அது கொஞ்ச கொஞ்சமாய் எனக்கு போதையானதே.
போதையென்று ஒன்றை கண்டேன் உன்னிடத்திலே
அடி பேதை என்று விலகிச் சென்றாய் இமைப் பொழுதிலே.
நீ தந்த போதை தானே களைந்து போகுமோ - அடி
நீ இன்றி போனதாலே மாற்று தேடுமோ
எப்போது நான் உனக்கு சொந்தமாகுவேன்?
அப்போது தான் என் உடல் உயிராகுமே.
மீ. வேலு
|
மீ. வேலு - ன் இதர
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|