"மோக முள்"
சாகும் வரை
தூக்கிலிடு ! - என்னை
சாகும் வரை தூக்கிலிடு!!
உன் கத்தை கூந்தலின் ஓரிழையில் -கட்டி ,
மாருக்கு மத்தியில் மறிக்கவிடு!!
உன் சிரைத்த (திருத்திய) புருவத்தின் மத்தியிலே,
எனை கருத்த பொட்டாய் புதைத்துவிடு!!
உயிர் உடல் உடை அர்த்தம் களை!,
உன் கோரப்பல்லில் கடித்துச்சுவை!.
ஆண்மை அகற்றி ஆணவமுடை!,
எனை ஊடறுத்து உதிரம் சுவை!!.
திரியென திரித்து எனை தீபமேற்று!,
உன் கத்திக் கண்ணில் கழுமரமேற்று!.
உன் மோகத்தீயில் எரியூட்டு!,
உன் சல்லடைக்கண்ணால் சன்னமாக்கு!.
எனை செருப்பென திருத்து!,
உன் பிஞ்சுக்காலால் நெஞ்சில் மிதி!.
உன் காதல் ஆசை என் காதிற்ச்சொல்.,
எனை கொன்றேனும் உன் ஆசை,
தீர்த்துக்கொள் !!..
நன்றி
சிவாஜி சங்கர் |