மும்பை தாக்குதல் - முதலாமாண்டு நினைவு மரபுக்கவிதாஞ்சலி
தொம்பையி னாறிய
தீயவர் திமிரோடு
மும்பையில் துட்டக் கால் வைத்தனர் – மேலும்
தும்பைப் பூ போன்ற உயிர்களை வதைத்தனர்
வம்பையும் விலைக்கு வாங்கினர்.
வேதனைக் குரல்கள் நாற்புறம் ஓலிக்க
கோதனைக் காக்கிளம் பியதரி மாப்படை
சோதனைத் தீர்க்க தம்மின்னுயிரை ஈந்து
சாதனை படைத்தவ்வெஞ் சமர்.
ஆயிற்றத் துன்பம் நிகழ்ந் தாண் டொன்று
போயிற்றோ நம்மனக் கவலைகள் - மாவீரர்களே..?
தீயிட்டழிக்கும் கொடும் தீவிரவாதி களையவ்
வாயிலினில் வைத்தே வதைத்திடும்.
(மும்பைத் தாக்குதல்
நடைபெற்று...இன்றுடன் ஓராண்டு நிறைவு ஆகிறது... அவ்வெஞ்சமிரில்
இன்னுயிரை ஈந்து பிற உயிர்களைக் காத்த மாவீரர்களுக்கு உங்களனைவரின்
சார்பிலும் இந்த மரபுக்கவிதையினை கண்ணீர் அஞ்சலியுடன்
சமர்ப்பிக்கிறேன்... இனியும் இதுபோன்ற துன்பியல்கள் இந்தியாவில்
நடைபெறக்கூடாது என்ற நற்சிந்தனைகளுடன் உங்களிடம் இதைப்
படையலிடுகிறேன்...)
நன்றி
மோகனன் |